பொள்ளாச்சி அருகே ஆழியாரில் நடந்து சென்ற சுற்றுலா பயணிகள் மீது கார் மோதிய விபத்தில் 8 வயது சிறுமி பலி - 6 பேர் படுகாயம்! கார் ஓட்டுநர் கைது

கோவை: பொள்ளாச்சி அருகே ஆழியாரில் நடந்து சென்ற சுற்றுலா பயணிகள் மீது கார் மோதிய விபத்தில் 8 வயது சிறுமி பலியான நிலையில் 6 பேர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


கோவை: பொள்ளாச்சி அருகே ஆழியாரில் நடந்து சென்ற சுற்றுலாப் பயணிகள் மீது கார் மோதிய விபத்தில் 8 வயது சிறுமி பலியான நிலையில் 6 பேர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் இடுவாய் பகுதியை சேர்ந்த பனியன் தொழிற்சாலையில் பணியாற்றி வரும் புவனேஸ்வரனும்(40), இவரது மனைவி பிரியா(38), மகள் வர்ஷா(8) மற்றும் உறவினர்களை அழைத்துக் கொண்டு பொள்ளாச்சியை அடுத்த ஆழியாறு நகரில் உள்ள உறவினர் வீட்டிற்க்கு வந்துள்ளனர்.

அப்போது, ஆற்றுப்பாலம் பகுதியில் நடந்து சென்றவர்கள் மீது வால்பாறையில் இருந்து பொள்ளாச்சி நோக்கி வந்த கார் மோதியது. இதில் வர்ஷா உள்ளிட்ட 6 பேர் படுகாயமடைந்தனர்.

பின்னர் அக்கம்பக்கம் உள்ள பொதுமக்கள் படுகாயமடைந்த வர்ஷா, புவனேஸ்வரன்(40), பிரியா(38), துர்கா(28), இலக்கியா(22), சபரீஸ்(30), யுவராஜ்(34) ஆகியோரை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் வர்ஷா பரிதாபமாக உயிரிழந்தார்.



பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அனைவரும் முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு படுகாயங்களுடன் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

மேலும் விபத்திற்கு காரணமாக இருந்த காரை பறிமுதல் செய்த ஆழியாறு காவல்நிலைய போலீசார் காரை ஓட்டி வந்த கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்த ரமேஷ் மற்றும் அவரது நண்பர்களை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்துறை கணிதம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் இணைந்து தொழில்துறை...

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.206) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உய...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...