கோவை: நெகமம் அருகே விஷ பூச்சி கடித்து பள்ளி மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நெகமம்-செஞ்சேரிமலையை அடுத்த மலைமந்திரிபாளையம் அரிஜன காலணியைச் சேர்ந்தவர் முருகேசன். இவரது மகள் திவ்யதர்சனி (14). இவர் அங்குள்ள அரசுப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில், கடந்த 15ம் தேதி இரவு 8 மணிக்கு மழை பெய்து நின்ற நிலையில் அங்குள்ள சாலையில் நடந்து சென்று உள்ளார். ரோட்டில் தண்ணீர் தேங்கி இருந்த நிலையில், தண்ணீரில் நடந்து சென்றார்.
அப்போது, காலில் ஏதோ கடித்து விட்டதுபோல் உணர்ந்து அலறி அடித்து தனது வீட்டுக்கு ஓடிச்சென்று பெற்றோர்களிடம் கூறினார். அவரது பெற்றோர்கள் திவ்யதர்சினியை கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இந்த நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி சிறுமி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து நெகமம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.