நீலகிரி: கோத்தகிரி பகுதியில் உள்ள கக்குச்சி கிராமத்தில் குடிநீருக்கு பயன்படுத்தும் கிணற்றில் விழுந்திருந்த சிறுத்தை இரண்டு நாட்களுக்குப் பின் இன்று சடலமாக மீட்கப்பட்டது.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கக்குச்சிப் பகுதியினை சுற்றிலும் வனப் பகுதிகள் காணப்படுகின்றன.
இந்த நிலையில், கடந்த 2 நாட்களாக இந்த கிராமத்தில் உள்ள மக்களுக்கு குடிநீர் விநியோகம் இல்லாமல் இருந்துள்ளது. இதனை தொடர்ந்து, அங்குள்ள கிணற்றின் குழாயில் ஏதேனும் அடைப்பு ஏற்பட்டுள்ளதா என்பதை அப்பகுதி கிராம மக்கள் இன்று பார்த்துள்ளனர்.
அப்பொழுது, திறந்த நிலையில் இருந்த கிணற்றில் விழுந்துள்ள சிறுத்தை தப்பிப்பதற்கு மின்மோட்டாரின் ஒயர்களை கடித்துள்ளதும் பின்னர் அது இறந்துள்ளதும் தெரியவந்தது.
பின்னர், இது குறித்து வனத்துறையிருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து வனத்துறையினர் சிறுத்தையின் சடலத்தை மீட்டனர்.

பிரேதப் பரிசோதனைக்குப் பின் சிறுத்தை இறந்ததற்கான காரணம் தெரியவரும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.