கோவையில் காலி பணியிடங்களை நிரப்பக்கோரி மின்சார வாரிய சங்கத்தினர் நாளை ஆர்ப்பாட்டம் நடத்த போவதாக அறிவிப்பு!

கோவை: கோவையில் காலி பணியிடங்களை நிரப்பக்கோரி மின்சார வாரிய சங்கத்தினர் நாளை ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளனர்.


கோவை: கோவையில் காலி பணியிடங்களை நிரப்பக்கோரி மின்சார வாரிய சங்கத்தினர் நாளை ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளனர்.



கோவை பத்திரிகையாளர் மன்றத்தில் தமிழ்நாடு மின்சார வாரிய இஞ்சினியர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் கோவிந்தராஜன் செய்தியாளர்களை சந்தித்தார்.



அப்போது அவர் பேசுகையில், மின்சார வாரியத்தில் பணியாளர் பற்றக்குறை உள்ளது. கோவை மண்டலத்தில் 5,439 பதவிகள் உள்ள நிலையில் 482 பேர் தான் பணியாற்றி வருகின்றனர்.

இதனால் அவசர அழைப்புகளை நிவர்த்தி செய்ய முடியாமல் தவிக்கின்றனர். கீழ்மட்ட பணியாளர்கள் குறைவாக உள்ளனர். அவசர அவசரமாக பணிகளை செய்ய உத்தரவிடுவதால் உயிர் பலி ஏற்படுகிறது. பிரிவு பணியாளர்கள் மன உலைச்சலுடன் தான் பணியாற்றுகின்றனர்.

இதுகுறித்து வாரிய தலைவருக்கு 2 ஆண்டுகளாக கடிதம் எழுதியுள்ளோம். மின் பொறியாளரிடமும் முறையிட்டுள்ளோம். ஆனாலும் பிரச்சனையை தீர்க்கவில்லை. எனவே, இந்த பிரச்சனையை தீர்க்க வேண்டும்.

மின்துறை அமைச்சரிடம் கடந்த 8வது மாதம் முறையிட்டோம். அவர் வாரியத்தலைவர் மூலம் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றார். ஆனால், வாரியத்தலைவர் இதுவரை பேச்சுவார்த்தை இல்லை.

இந்த சூழலில், கோவை, திருப்பூர் உடுமலை ஆகிய பகுதிகளில் உள்ள மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு நாளை ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்துறை கணிதம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் இணைந்து தொழில்துறை...

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.206) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உய...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...