கோவையில் தாய் இறந்த துக்கத்தில் விஷம் குடித்து மகள் தற்கொலை..! மகனுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!

கோவை: கோவை இடையர்பாளையத்தில் தாய் இறந்த துக்கத்தில் மகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் மகனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


கோவை: கோவை இடையர்பாளையத்தில் தாய் இறந்த துக்கத்தில் மகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் மகனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கோவை கவுண்டம்பாளையம் அருகே இடையர்பாளையம் மாகாளியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் ராஜன் இவருடைய மனைவி சிந்து (27). இவர்களுக்கு திருமணம் முடிந்து 6 வருடம் ஆகிறது. ஆனால், குழந்தையில்லை. சிந்துவுடன் அவருடைய தாய் செல்வி (58), தம்பி இந்தியன் (23), ஆகியோரும் வசித்து வந்தனர்.

இந்நிலையில், சிந்துவின் தந்தை இறந்துவிட்டதால் செல்வி வேலைக்குச் சென்று குழந்தைகளை வளர்த்து ஆளாக்கினார். இந்த நிலையில் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, அவர் மருத்துவ பரிசோதனை செய்து கொண்டார்.

அப்போது, அவருக்கு புற்றுநோய் இருப்பது தெரிய வந்தது. இதற்காக அவர் பல இடங்களில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், செல்வியின் உடல்நிலை மிகவும் மோசமானது. சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். தங்களை கஷ்டப்பட்டு ஆளாக்கிய தாய் திடீரென இறந்ததால் சிந்துவும் இந்தியனும் அதிர்ச்சி அடைந்தனர். தாயில்லாமல் தங்களால் வாழ முடியாது என கருதிய அவர்கள் 2 பேரும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தனர்.

இதையடுத்து, வாழ்க்கையில் விரக்தியடைந்த சிந்துவும் இந்தியனும் விஷம் குடித்து மயங்கி கிடந்தனர். இதனையறிந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு நேற்று காலை சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலன் இல்லாமல் சிந்து பரிதாபமாக இறந்தார்.

இதனிடையே, இந்தியனுக்கு மருத்துவர்கள் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இதுகுறித்த புகாரின் பேரில் துடியலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தாமோதரன் மற்றும் போலீசார் 174 மற்றும் 176 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

தாய் இறந்த அதிர்ச்சியில் மகள் தற்கொலை செய்து கொண்டது அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்துறை கணிதம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் இணைந்து தொழில்துறை...

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.206) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உய...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...