கோவையில் கத்தியைக் காட்டி பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபட்ட ரியல் எஸ்டேட் அதிபர் கைது!

கோவை: கோவையில் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்ற ரியல் எஸ்டேட் அதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.


கோவை: கோவையில் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்ற ரியல் எஸ்டேட் அதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சதீஷ் (37) ரியல் எஸ்டேட் அதிபராக உள்ளார். இவரது நண்பர் பாலக்காட்டைச் சேர்ந்த சபரி (28), இருவரும் ரியல் எஸ்டேட் அதிபர்கள். சபரி கண்ணூரில் உள்ள ரெஜீசை தொடர்பு கொண்டு கோவை பெரியநாயக்கன் பாளையத்தில் குறைந்த விலைக்கு நிலம் விற்பனைக்கு உள்ளது. இருவரும் சேர்ந்து அந்த இடத்தை பார்ப்போம் என்று அழைத்துள்ளார்.

அதன்படி, சபரி ஆகியோர் தனது நண்பர் நிசார் (38), என்பவருடன் நேற்று முன்தினம் மாலை காரில் பெரியநாயக்கன்பாளையத்தில் அடுத்துள்ள அங்காலம்மாள் புரம் பகுதியில் உள்ள ஒரு காட்டுப் பகுதிக்கு வந்தனர்.

அப்போது, திடீரென்று சபரி கத்தியை காட்டி ரெஜிஸ் மற்றும் அவரது நண்பர் நிஷாரை மிரட்டி பணம் நகையை பறிக்க முயன்றுள்ளார். இதனால் அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தாங்கள் வந்த காரை விட்டு விட்டு தப்பி ஓடினர்.

இதனை தொடர்ந்து, சபரி காரை திருடிச் சென்று விட்டார். இது குறித்து ரெஜிசும், நிஷாரும் பெரியநாயக்கன்பாளையம் போலீசில் புகார் செய்தனர். இதையடுத்து, போலீசார் வழக்கு பதிவு செய்து சபரியை கைது செய்தனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்துறை கணிதம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் இணைந்து தொழில்துறை...

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.206) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உய...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...