தீபாவளியை முன்னிட்டு ஆழியாரில் குவிந்த சுற்றுலா பயணிகள்; கூட்டத்தை தவிர்க்க போலீஸார் அறிவுரை

பொள்ளாச்சி: தீபாவளியை முன்னிட்டு ஆழியாரில் குவிந்த சுற்றுலா பயணிகளின் நெரிசலை சமாளிக்க முடியாமல் போலீசார் திணறல்.


பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியார், வால்பாறை உள்ளிட்ட பகுதிகளுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில், நோய் பரவல் காரணமாக வால்பாறை உள்ளிட்ட பகுதிக்கு சுற்றுலா செல்ல மிகுந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது. மேலும், ஆழியார் குரங்கு அருவி தொடர்ந்து மார்ச் மாதம் முதல் மூடப்பட்டுள்ளது.



இந்நிலையில், கடந்த இரு தினங்களாக தீபாவளி தொடர் விடுமுறையை முன்னிட்டு ஏராளமான சுற்றுலா பயணிகள் தங்கள் குடும்பங்களோடு ஆழியாரில் குவிந்தனர். குரங்கு அருவி மற்றும் பூங்கா பகுதிகள் திறக்கப்படாததால், ஆழியார் தடுப்பணை பகுதியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்.

சுற்றுலா பயணிகள் வருகை அதிகளவில் இருந்ததால், அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். கூட்டம் அதிகமாக இருந்ததால், நோய் பரவல் ஏற்படும் அபாயம் உள்ளது, என்று அவர்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர். மேலும், சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் பண்டிகை மற்றும் விடுமுறை கொண்டாட்டங்களின் போது பாதுகாப்புடன் பொது இடங்களுக்கு வந்து செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தினர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...