நீலகிரி: 37 ஆண்டுகள் கழித்து நீலகிரி வனப்பகுதியில் தென்பட்ட அரிய வகை பறவை கண்டு பறவை ஆர்வலர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
நீலகிரி: 37 ஆண்டுகள் கழித்து நீலகிரி வனப்பகுதியில் தென்பட்ட அரிய வகை பறவை கண்டு பறவை ஆர்வலர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம் 65 சதவிகிதம் அடர்ந்த வனப்பகுதியை கொண்டுள்ளது. இங்கு வன விலங்குகளான யானை, புலி, கரடி, சிறுத்தை, காட்டு மாடு உட்பட அரிய வகை விலங்கினங்கள், பறவைகள், ஊர்வன வகைகள் உள்ளன.
இது மட்டுமின்றி பல வகையான வெளிநாட்டு பறவைகள் இங்கு வந்து செல்கிறது.
இதில்,குன்னூர் அருகே உள்ள கோலணிமட்டம் கிராமத்தில் அரிய வகையான 'லசார்ட் குக்கூ' என்ற பறவை தென்பட்டுள்ளது.

இந்த பறவை உலகளவில் பாகிஸ்தான், சீனா, ஜப்பான், வியட்நாம், வட கொரியா, தென் கொரியா போன்ற நாடுகளில் காணப்படுகின்றன. குறிப்பாக,இந்தியாவில் இமயமலை தொடர்களில், ஜம்மு, காஷ்மீர்,உத்தரகாண்ட் போன்ற பகுதிகளில் காணப்படுகிறது.
குளிர் காலத்தில் இடம்பெயர்ந்து சென்று இனப்பெருக்கத்தில் ஈடுபடும், லசார்ட் குக்கூ வகை பறவை, கடல் மட்டத்திலிருந்து சுமார் 1300 அடி முதல் 3600 அடி உயரம் கொண்ட பகுதிகளில் நிலவும் காலநிலையில் மட்டுமே வாழக்கூடியவை.
இந்தியாவில் உள்ள லசார்ட் குக்கூ பறவை குளிர் காலத்தில் இந்தியாவில் இருந்து இலங்கை மற்றும் ஆப்ரிக்காவிற்கு சென்று இனப்பெருக்கத்தில் ஈடுபடுகின்றன. இவ்வகையான, பறவையினம்(வார்ப்லர்) போன்ற வேறு பறவைகளின் கூட்டில் முட்டையிடுகின்றன.

தமிழகத்தில், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கோடியோகரை, திருவண்ணாமலை, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட 9இடங்களில் இந்த பறவைகள் வந்தது பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆனால், நீலகிரி மாவட்டத்தை பொறுத்தவரை லசார்ட் குக்கூ பறவை1983 ஆம் ஆண்டுஅங்கு வந்தது என்பது பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது, 37 ஆண்டுகள் கழித்து மீண்டும் கேத்தி வேலி தொடரில் கோலணிமட்டம் என்ற இடத்தில் பதிவாகியுள்ளது.

அந்த பகுதியை சேர்ந்த விவசாயி ஒருவர் தனது பணியின் போது மற்ற பறவைகள் இந்த பறவையை துரத்துவதை கண்டு, அதனை மீட்டு அடர்ந்த வனப்பகுதியில் கொண்டு விட்டுள்ளார்.37 ஆண்டுகள் கழித்து மீண்டும் அறிய வகை பறவை நீலகிரியில் பதிவானது பறவை ஆர்வலர்கள் இடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.