கோவையில் லாரியில் மேல் அமர்ந்து சென்ற வடமாநில வாலிபர்கள் தவறி விழுந்ததில், ஒருவர் பலி

கோவை: லாரியில் பயணம் செய்த போது டிரைவர் பிரேக் போட்டதால் தவறி விழுந்த வடமாநில வாலிபர், கோவையில் பரிதாபமாக பலியானார்.


கோவை: லாரியில் பயணம் செய்த போது டிரைவர் பிரேக் போட்டதால் தவறி விழுந்த வடமாநில வாலிபர், கோவையில் பரிதாபமாக பலியானார்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் பிக்காராம் லிம்பு (20), ஜெயேந்திரா தாஸ் (21), இவர்கள் 2 பேரும் பொள்ளாச்சி அடுத்த கோமங்கலம் அருகே உள்ள நல்லாம் பள்ளியில் தங்கி அங்குள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகின்றனர். நேற்று மாலை, விக்காராம் லிம்பு ஜெயச்சந்திர தாஸ் ஆகியோர் நிறுவனத்தில் இருந்து பொருட்களை ஏற்றிக்கொண்டு லாரி மேல் அமர்ந்து சென்றனர்.

அப்போது, லாரி பூசாரிபட்டி அருகே சென்றபோது எதிர்பாராதவிதமாக ரெண்டு பேரும் லாரியில் இருந்து தவறி கீழே விழுந்து பலத்த காயத்துடன் உயிருக்கு போராடினர். அதைப் பார்த்த, அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக விக்காராம் விம்பு உயிரிழந்தார்.

இது குறித்து கோமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்துறை கணிதம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் இணைந்து தொழில்துறை...

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.206) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உய...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...