மேட்டுப்பாளையத்தில் கஞ்சா கடத்திய 3 வாலிபர்கள் கையும் களவுமாக கைது

கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சென்னகேசவன் உத்தரவின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் திலக் மற்றும் போலீசார் மேட்டுப்பாளையம் ரோடு மேடு பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சென்னகேசவன் உத்தரவின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் திலக் மற்றும் போலீசார் மேட்டுப்பாளையம் ரோடு மேடு பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். 

அப்போது, சந்தேகத்தின் பேரில் அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிளை தடுத்து நிறுத்தி சோதனை செய்ததில் ஒரு கிலோ கிராம் கஞ்சா பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த ரஞ்சித் (வயது 22), ரியாசுதீன் (25), ஆகிய 2 பேரை கைது, மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர். 

மேலும், போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பிரபாகரன் மற்றும் போலீசார் மேட்டுப்பாளையம் பத்ரகாளியம்மன் கோவில் ரோடு உப்பு பள்ளம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியே வந்த வாகனத்தை சந்தேகத்தின் பேரில் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது, மோட்டார் சைக்கிளில் பதுக்கி வைத்திருந்த 500 கிராம் கஞ்சா விற்பனை செய்ய கடத்தி வந்தது தெரியவந்தது. 

விசாரணைக்கு பின், ஷேக் பாஷித் (26), என்பவரையும் போலீசார் கைது செய்தனர். இவர்கள் மீது போதைப் பொருள் கடத்தல் மற்றும் தடுப்பு பிரிவில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்துறை கணிதம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் இணைந்து தொழில்துறை...

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.206) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உய...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...