அமெரிக்க மேற்படிப்பு கனவானதால், பிளாஸ்டிக் பையால் முகத்தை இறுக்கி கோவையில் பட்டதாரி வாலிபர் தற்கொலை

கோவை: அமெரிக்காவிற்கு மேற்படிப்புக்கு செல்ல முடியாத விரக்தியில் பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடி பட்டதாரி வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கோவையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: அமெரிக்காவிற்கு மேற்படிப்புக்கு செல்ல முடியாத விரக்தியில் பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடி பட்டதாரி வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கோவையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- தெலுங்கானா மாநிலம் மதுரா நகரை சேர்ந்தவர் ராஜா ரெட்டி. இவரது மகன் சுமந்து ரெட்டி (வயது 27), பிடெக் பட்டதாரி. இவர் உயர் படிப்பு படிப்பதற்காக அமெரிக்கா செல்வதற்காக முயற்சி மேற்கொண்டு வந்தார். இதற்காக அவர் தனது பெற்றோரிடம் பணம் கேட்டு வந்த நிலையில், அவர்கள் பணம் கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் மனவேதனை அடைந்த சுமந்த் ரெட்டி, பெற்றோரிடம் கோபித்துக்கொண்டு கடந்த 11-ஆம் தேதி கோவைக்கு வந்துள்ளார். பின்னர் அவர், காந்திபுரம், நேரு வீதியில் உள்ள ஒரு லாட்ஜில் அறை எடுத்து தங்கியிருந்தார்.

நேற்று நீண்ட நேரமாகியும் சுமந்து ரெட்டி தங்கியிருந்த அறை கதவு திறக்காததால், சந்தேகம் அடைந்த லாட்ஜ் ஊழியர்கள் அறைக்கதவை

தட்டியுள்ளனர். ஆனால், கதவு திறக்காமல், கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. இதனால் சந்தேகமடைந்த லாட்ஜ் ஊழியர்கள் இதுகுறித்து காட்டூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனடியாக போலீசார் விரைந்து வந்து அறைக்கதவை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது, சுமந்த் அறைக்குள் பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடி இறுக்கி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து காட்டூர் போலீசார் 174, 176 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்துறை கணிதம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் இணைந்து தொழில்துறை...

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.206) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உய...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...