கோவை: கோவையில் ஆட்டோவில் சென்ற பெண்ணிடம் பணப்பை மாயமானது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம், கோபி பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம். இவரது மனைவி கிருத்திகா (28), இவர் சென்னையில் இருந்து கோவைக்கு ரயிலில் வந்தார்.
பின்னர், கோவை ரயில் நிலையத்தில் இருந்து காந்திபுரம் பேருந்து நிலையம் நோக்கி ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார்.
இந்த நிலையில், பேருந்து நிலையம் அருகே இவர் ஆட்டோவிலிருந்து இறங்கி நின்றபோது, இவர் வைத்திருந்த பேக்கை காணவில்லை. அதில் 33 ஆயிரம் ரூபாய் இருந்தது. கிருத்திகா ஆட்டோவில் ஏறும் போது திருடப்பட்டு இருக்கலாம் என தெரிகிறது.
இதையடுத்து, உடனடியாக காட்டூர் போலீசில் புகார் அளித்ததன் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.