மாவட்டத்தில் உபயோகமில்லாத கல்லுகுழிகளில் கட்டிடக்கழிவுகள் கொட்டப்படும் - மாநகராட்சி கமிஷனர் தகவல்

கோவை: கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்படும் கட்டிடக்கழிவுகளை உபயோகமில்லாத கல்குவாரிகளில் உள்ள கல்லுகுழிகளில் கொட்ட நடவடிக்கை எடுக்கப்படும், என மாநகராட்சி கமிஷனர் குமாரவேல் பாண்டியன் கூறியுள்ளார்.


கோவை: கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்படும் கட்டிடக்கழிவுகளை உபயோகமில்லாத கல்குவாரிகளில் உள்ள கல்லுகுழிகளில் கொட்ட நடவடிக்கை எடுக்கப்படும், என மாநகராட்சி கமிஷனர் குமாரவேல் பாண்டியன் கூறியுள்ளார்.

கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. மாநகராட்சிக்குட்பட்ட பல பகுதிகளில் பழையக் கட்டிடங்களை சீரமைப்பது, புதிய கட்டிடங்கள் கட்டுவது என கட்டிடப் பணிகள் எப்போதும் நடந்துக்கொண்டே தான் இருக்கிறது.

இதனிடையே, பழையக் கட்டிடங்களை இடித்து அங்கு புதிய கட்டிடம் கட்டும் போதும், பழையக் கட்டிடங்கள் சீரமைக்கப்படும் போதும் கட்டிட கழிவுகள் உருவாகின்றன. மாநகராட்சி சார்பாக குப்பைகளை மேலான்மை செய்ய திட்டங்கள் உள்ள நிலையில், கட்டிட கழிவுகளை அகற்ற போதுமான திட்டங்கள் இல்லை. இதனால், மாநகராட்சிக்குட்பட்ட பல பகுதிகளில் சிலர் இரவு நேரங்களில் கட்டிடக் கழிவுகளை சாலையோரங்களில், புறம்போக்கு இடங்களில் கொட்டிவிட்டு செல்கின்றனர். இதனால், நிலம் மற்றும் குளங்கள் மாசு அடைகிறது. இதனை தடுக்கும் விதமாக மாநகராட்சி சார்பாக கட்டிடக் கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து மாநகராட்சி கமிஷனர் குமாரவேல் பாண்டியன் கூறுகையில், ‘‘கோவை மாவட்டத்தில் உபயோகமில்லாத கல்குவாரிகளில் உள்ள கல்லுகுழிகளில் இந்த கட்டிடக் கழிவுகளை கொட்ட திட்டமிட்டுள்ளோம். இதற்காக மாவட்ட நிர்வாகத்திடம் உபயோகமில்லாத கல்குவாரிகள் குறித்து தெரியப்படுத்த கேட்டுள்ளோம். விரைவில், கட்டிடக்கழிவுகளை சேகரித்து உபயோகமில்லாத கல்லுகுழிகளில் கொட்டி அந்த கல்லுகுழிகள் மூடப்படும். மேலும், சாலையோரங்களில், புறம்போக்கு நிலங்களில் கட்டிடக்கழிகளை கொட்டுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,’’ என்றார்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்துறை கணிதம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் இணைந்து தொழில்துறை...

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.206) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உய...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...