தீபாவளி பண்டிகை எதிரொலி: கோவையில் மல்லிகை பூ கிலோ 1000 ரூபாய்க்கு விற்பனை - வியாபாரிகள் மகிழ்ச்சி!

கோவை: கோவையில் தீபாவளி பண்டிகையையொட்டி பூக்கள் விலை கிடுகிடு என உயர்ந்து உள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


கோவை: கோவையில் தீபாவளி பண்டிகையையொட்டி பூக்கள் விலை கிடுகிடு என உயர்ந்து உள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தீபாவளி பண்டிகை நாளை சனிக்கிழமை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி வீடுகளில் பூஜை செய்வதற்கும், கோயில்களில் சுவாமி அலங்காரம் செய்வதற்கு பூக்கள் அதிகம் தேவைப்படும்.

இதனிடையே, இந்த ஆண்டு கொரோனோ பரவல் காரணமாக மேட்டுப்பாளையம் சாலையில் செயல்பட்டு வந்த பூமார்க்கெட் ஆர்.எஸ் புரம் தேவாங்கர் மேல்நிலைப் பள்ளி மைதானத்திற்கு மாற்றப்பட்டு செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில், இங்குள்ள நூற்றுக்கணக்கான கடைகளில் பொதுமக்கள் ஆர்வத்துடன் தீபாவளி பண்டிகையை ஒட்டி பூக்களை வாங்க குவிந்தனர். இதனால் பூ மார்க்கெட் பகுதியில் நேற்று மக்கள் கூட்டம் அலைமோதியது. மேலும், பண்டிகையை முன்னிட்டு பூக்களின் விலை உயர்ந்ததாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

இது குறித்து வியாபாரிகள் நம்மிடம் கூறியதாவது:-

கோவை சத்தியமங்கலம், மதுரை, நிலக்கோட்டை, ஆகிய ஊர்களிலிருந்து மல்லிகை, முல்லை, ஜாதி, சாமந்தி ஆகிய பூக்கள் வரும். தற்போது ஊரடங்கு காரணமாக பூக்களின் வரத்து குறைந்துள்ளது. தீபாவளி பண்டிகை என்பதால் அனைவருமே பூக்கள் வாங்க வருகிறார்கள். இதனால் பூக்களின் தேவை அதிகமாக இருக்கிறது.

ஆனால், அதற்கேற்றவாறு பூக்களின் வரத்து குறைந்துள்ளதால் விலையும் உயர்ந்துள்ளது. மூன்று நாட்களுக்கு முன்பு ஒரு கிலோ 400 ரூபாய்க்கு விற்ற மல்லிகைப்பூ தற்போது ரூபாய் ஆயிரம் வரை விற்கப்படுகிறது. முல்லை, ஜாதி ஆகிய பூக்களின் விலையும் அதே அளவிற்கு விலை உயர்ந்துள்ளது. ஒரு கிலோ ரூபாய் 100 முதல் 120 வரை விற்ற சாமந்திப்பூ தற்போது ரூபாய் 250 முதல் 300 வரை விற்கப்படுகிறது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்துறை கணிதம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் இணைந்து தொழில்துறை...

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.206) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உய...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...