கோவையில் 10ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய சிறுவன் போக்கோ சட்டத்தின் கீழ் கைது..! சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைப்பு!

கோவை: கோவையில் பத்தாம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய சிறுவனை போக்கோ சட்டத்தின் கீழ் கைது செய்த போலீசார் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைத்தனர்.


கோவை: கோவையில் பத்தாம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய சிறுவனை போக்கோ சட்டத்தின் கீழ் கைது செய்த போலீசார் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பகுதியைச் சேர்ந்தவர் 17 வயது சிறுவன். இவன் கோவை போத்தனூர் கோணவாய்க்கால் பாளையம் பகுதியில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தான்.

இந்நிலையில், அந்த சிறுவனுக்கும் அந்த பகுதியில் உள்ள பத்தாம் வகுப்பு படித்து வந்த மாணவிக்கும் பழக்கம் ஏற்பட்டது. மேலும், சிறுவன் அந்த மாணவியிடம் செல்போனில் பேசி வந்ததாக தெரிகிறது.

இதனிடையே, மாணவியின் பெற்றோர்கள் அவளது படிப்பிற்கு வீட்டில் தனி அறையும் ஏற்பாடு செய்து கொடுத்திருந்தனர். இதனை சாதமாக பயன்படுத்திக் கொண்ட அந்த சிறுவன் மாணவியின் அறைக்குள் புகுந்து மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. இதில் சிறுமி கர்ப்பமாகி உள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் மாணவியிடம் கேட்ட போது, அந்த பகுதியில் உள்ள சிறுவன் தன்னை பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாக கூறி அழுதுள்ளார்.

இதையடுத்து, அந்த சிறுமியை பெற்றோர்கள் காட்பாடியில் உள்ள உறவினர் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அந்த சிறுவன் தொடர்ந்து மாணவியின் செல்போனிற்கு தொடர்பு கொண்டு, தொல்லை கொடுத்து வந்துள்ளான்.

இதனையடுத்து, சிறுமியின் பெற்றோர் கோவை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி 17 வயது சிறுவனை போக்கோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைத்தனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்துறை கணிதம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் இணைந்து தொழில்துறை...

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.206) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உய...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...