கோவை: கோவையில் இரும்பு குடோனில் ஜி.எஸ்.டி அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் ரூ.5 கோடிக்கு மேல் ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு செய்யப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கோவை கணபதி மற்றும் சின்னவேடம்பட்டி பகுதியில் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் இரும்பு குடோன்கள் உள்ளது. இந்த குடோன்களில் இருந்து தினமும் பலநூறு டன் இரும்பு கம்பிகள் உள்ளிட்ட பொருட்கள் சப்ளை செய்யப்படுகிறது.
இந்நிலையில், இங்குள்ள பழைய இரும்பு குடோன்களில் தொடர்ந்து வரி ஏய்ப்பு செய்யப்படுவதாக ஜி.எஸ்.டி அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தது.
இந்த நிலையில், புகாரின் பேரில் ஜி.எஸ்.டி இணை ஆணையர் கோவிந்தராஜ் தலைமையில் கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் 15 இடங்களில் உள்ள இரும்பு குடோன்களில் அதிகாரிகள் குழுவினர் நேற்று திடீரென சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில் இரும்பு குடோன்களில் உள்ள இரும்பு பொருட்கள் அனைத்தும் முறையாக இல்லாமல் போலி பில் மூலமாக வியாபாரத்திற்கு அனுப்பி வைக்கப்படுவதாக தெரியவந்தது. மேலும் இந்த இரும்பு குடோன்களுடன் தொடர்புடைய திருப்பூரில் உள்ள ஒரு இரும்பு பொருட்கள் தயாரிப்பு நிறுவனத்தில் அதிகாரிகள் சோதனையில் போலி பில் மூலமாக பல கோடி ரூபாய்க்கு இரும்பு வியாபாரம் செய்யப்பட்டதாக தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து ஜி.எஸ்.டி அதிகாரிகள் கூறியதாவது:-
கோவை, திருப்பூரில் செயல்பட்டு வரும் இரும்பு குடோன்களில் சுமார் 5 கோடிக்கு மேல் ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு செய்யப்பட்டுள்ளது. சில குடோன்களில் இருந்து போலி பில் மற்றும் வரி ஏய்ப்புக்கான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலும், ஏராளமான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. முழுமையான சோதனைக்குப் பிறகு ஆவணங்களை ஆய்வு செய்தால்தான் மொத்தம் எவ்வளவு வரி மோசடி செய்யப்பட்டுள்ளது என்று தெரியவரும், இவ்வாறு அவர்கள் கூறினர்.