கோவையில் தொழிலக பாதுகாப்பு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை..! கணக்கில் வராத ரூ.1.5 லட்சம் பறிமுதல் - 3 பேர் மீது வழக்குப்பதிவு!

கோவை: கோவையில் உள்ள தொழில் பாதுகாப்பு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் விடிய விடிய நடத்திய சோதனையில் கணக்கில் வராத 1.50 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டு 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


கோவை: கோவையில் உள்ள தொழில் பாதுகாப்பு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் விடிய விடிய நடத்திய சோதனையில் கணக்கில் வராத 1.50 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டு 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

லஞ்ச ஒழிப்பு போலீசார் தமிழகம் முழுவதும் கடந்த சில வாரங்களாக அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், வடகோவை மேம்பாலம் அருகே தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கம் இணை இயக்குனர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில், அலுவலகத்திற்கு நேற்று மாலை லஞ்ச ஒழிப்பு போலீசார் வந்தனர். பின்னர் அவர்கள் அலுவலக பிரதான நுழைவு வாயிலை பூட்டினார். மேலும் அங்கிருந்த தொலைபேசி இணைப்புகளைத் துண்டித்து விட்டு, தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, ஒவ்வொரு அறையாக சென்று டேபில், கழிப்பறை, அலுவலகக் கோப்புகள் உள்ளிட்டவற்றை சோதனை செய்தனர். மேலும், அலுவலகத்தில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா? என்று சோதனை நடத்தினர். இந்த சோதனையின்போது அலுவலகத்திலிருந்து மொத்தம் ரூபாய் 1.5 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

இது குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் கூறியதாவது:-

சோதனையின் போது அலுவலகத்தில் அதிகாரிகள் யாரும் இல்லை. மேலும் ரூபாய் 5 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து விசாரணை நடந்து கொண்டிருந்த போது இணை இயக்குனர் அறைக்கு வாலிபர் ஒருவர் வந்தார். அவரை பிடித்து சோதனை செய்து அவரிடமிருந்து ஒரு லட்சத்து 16 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

விசாரணையில் அந்த வாலிபர் இடைத்தரகர் போல் செயல்பட்டது தெரிய வந்துள்ளது. அவரது பெயர் பனையப்பன் என்பதும் தெரியவந்தது. இதுதவிர துணை இயக்குனர் அலுவலகத்தில் இருந்து ரூபாய் 25,000 கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும், தொடர்பாக இணை இயக்குநர் வேணுகோபால், துணை இயக்குனர் சாந்திப்பிரியா, இடைத்தரகர்கள் பனையப்பன் ஆகிய 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து இடைத்தரகர் பனையப்பனிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Newsletter

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.206) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உய...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...