கோவை மருதமலை அருகே கொம்புகள் உடைந்த நிலையில் வழிதவறி குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்த புள்ளிமானுக்கு வனத்துறையினர் சிகிச்சை!

கோவை: கோவை மருதமலை அருகே கொம்புகள் உடைந்த நிலையில் வழி தவறி குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்த 4 வயது ஆண் புள்ளி மானுக்கு வனத் துறையினர் முதலுதவி அளித்து அடர் வனப்பகுதிக்குள் அனுப்பி வைத்தனர்.


கோவை: கோவை மருதமலை அருகே கொம்புகள் உடைந்த நிலையில் வழி தவறி குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்த 4 வயது ஆண் புள்ளி மானுக்கு வனத் துறையினர் முதலுதவி அளித்து அடர் வனப்பகுதிக்குள் அனுப்பி வைத்தனர்.



கோவை மருதமலை வனப்பகுதியை ஒட்டியுள்ள கல்வீராம்பாளையம், முருகன் நகர் பகுதியில் 4 வயது மதிக்கத்தக்க ஆண் புள்ளி மான் ஒன்று வழிதவறி குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்தது.

கொம்பு உடைந்து தலையில் காயத்துடன் வந்த புள்ளிமானை கண்ட நாய்கள் துரத்தத் தொடங்கியதால் அச்சமடைந்த புள்ளிமான் வீடுகளுக்கு இடையில் உள்ள சந்து ஒன்றில் பதுங்கியது. புள்ளிமானை ஆச்சரியத்துடன் பார்த்த அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு தகவல் அளித்தனர்.

பின்னர், தகவலின் அங்கு வந்த வனத்துறையினர் மானை மீட்டு முதலுதவி அளித்தனர். பின்னர் அடர் வனப்பகுதிக்குள் அனுப்பி வைத்தனர்.

இது குறித்து வன அதிகாரிகள் கூறுகையில், மான் வகைகள் இயல்பாகவே இரண்டாம் முறை கொம்பு வளர்ச்சிக்கு தானாகவே கொம்புகளை உடைத்துக் கொள்ளும் தன்மை கொண்டது எனவும் இதன் காரணமாகவே கொம்புகள் உடைந்து இருக்கலாம் எனவும் தானாகவே இது குணமடைந்து கொம்புகள் வளரும் எனவும் மான் தற்போது ஆரோக்கியமாக உள்ளதாக தெரிவித்தனர்.

Newsletter

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.206) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உய...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...