கோவை: கோவையில் திமுக இளைஞரணியின் செயல்பாடுகள் மற்றும் கடந்த கால வரலாறு தொடர்பான கண்காட்சியை உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
கோவை: கோவையில் திமுக இளைஞரணியின் செயல்பாடுகள் மற்றும் கடந்த கால வரலாறு தொடர்பான கண்காட்சியை உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

கடந்த இரு தினங்களுக்கு முன்பு திமுக நிகழ்ச்சிகளில் பங்கேற்க திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் விமானம் மூலம் கோவை வந்தார்.
இந்நிலையில், இன்று கோவை வடகோவை பகுதியில் உள்ள திமுக மாவட்ட அலுவலகத்திற்கு வந்த அவர், அங்கு அமைக்கப்பட்டிருந்த புகைப்பட கண்காட்சியை பார்வையிட்டார்.

இதன் பின்னர் திருப்பூர் மற்றும் கோவை இளைஞரணி நிர்வாகிகளுடன் நேர்காணல் நடைபெற்றது. கோவை மாநகர கிழக்கு, மேற்கு, புறநகர் வடக்கு, தெற்கு, திருப்பூர் வடக்கு, தெற்கு உள்ளிட்ட 9 மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர் பணியிடங்கள் காலியாக உள்ளது.

இது தொடர்பாக ஆய்வு மேற்கொண்ட பின்னர் பெரியகடைவீதி பகுதி கழகத்திற்கு உட்பட்ட பொருளாளராக இருந்து மறைந்த மோகன்ராஜின் குடும்பத்தினருக்கு 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார். இதில் 200க்கும் மேற்பட்ட இளைஞரணியினர் பங்கேற்றனர்.