விவசாயத்தை கைவிடுவதை விட உயிரை விடுவதே மேல் என கோவையில் மாமியார் மற்றும் மருமகள் விஷம் குடித்தனர்; மாமியார் பலி

கோவை: கோவை அருகே காரமடையில் ஊரடங்கு காலத்தில் விவசாயத்தில் போதிய வருமானம் இல்லாத காரணத்தினால், மனமுடைந்து மருமகளுடன் விஷம் குடித்த மாமியார் பலியானார்.


கோவை: கோவை அருகே காரமடையில் ஊரடங்கு காலத்தில் விவசாயத்தில் போதிய வருமானம் இல்லாத காரணத்தினால், மனமுடைந்து மருமகளுடன் விஷம் குடித்த மாமியார் பலியானார்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது- கோவை காரமடை அருகே உள்ளது பொங்குபாளையம். இந்தப் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் இவரது மனைவி நாகமணி (வயது 45) இவர்களுடன் ஆறுமுகத்தின் தாய் முத்தம்மாள் (65).என்பவரும் வசித்து வந்தார். மூன்று பேரும் சேர்ந்து விவசாயம் செய்து வந்தனர்.

ஊரடங்கில் விவசாயத்தை முறையாக கவனிக்க முடியவில்லை. இதனால், ஆறுமுகம் மனமுடைந்து காணப்பட்டார். உறவினர் மற்றும் நண்பர்களிடம் கடன் வாங்கி பயிர் செய்தும் போதிய வருமானம் இல்லாததால், விவசாயத்தை கைவிட்டு விட்டு வேறு தொழிலுக்கு போகலாமா? என்று தாய் மற்றும் மனைவியிடம் புலம்பி வந்துள்ளார்.

ஆனால், விவசாயத்தைக் கைவிட தாய் மற்றும் மனைவிக்கு மன்மில்லாததால், இருவரும் விரக்தியில் இருந்துள்ளனர். இறுதியில், விவசாயத்தை கைவிடுவதை விட உயிரை விடுவதே மேல் என்று நேற்று எண்ணிய, மாமியார் முத்தம்மாள், மருமகள் நாகமணி ஆகியோர் வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்த சிறிது நேரத்தில் இருவரும் வீட்டில் மயங்கி விழுந்தனர்.

வீட்டில் வெகுநேரம் ஆகியும் மருமகள் மற்றும் மாமியார் வெளியே வராததால், அக்கம் பக்கத்தினர் வீட்டிற்கு சென்று பார்த்தனர். அப்போது இரண்டு பேரும் வாயில் நுரை தள்ளியபடி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தும் தெரியவந்தது. அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர், இதுகுறித்து ஆறுமுகத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

பின்னர், ரெண்டு பேரையும் மீட்டு காரமடையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதும், சிகிச்சை பலனின்றி மூதாட்டி முத்தம்மாள் பரிதாபமாக இறந்தார். மருமகள் நாகமணி தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தாய் முத்தம்மாளின் உடலை பார்த்து மகன்ஆறுமுகம் கதறி அழுதார். இது குறித்து, காரமடை போலீசார் 174 மற்றும் 176 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்துறை கணிதம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் இணைந்து தொழில்துறை...

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.206) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உய...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...