கோவை: 17 வயதுடைய பெண்ணின் பெற்றோர்களிடம் ஆபாச படங்களை காட்டி திருமணம் செய்து வைக்க கூறி மிரட்டிய தனியார் நிறுவன ஊழியரை போலீசார் கைது செய்தனர்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே உள்ள செல்லமலையை சேர்ந்தவர் சேதுராம் இவரது மகன் ரஞ்சித் (வயது 30). இவர் கோவை சரவணம்பட்டியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இதற்காக விசுவாச புரத்தில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி வேலைக்கு சென்று வந்தார்.
சில மாதங்களுக்கு முன்பு, ரஞ்சித்துக்கு இன்ஸ்டாகிராம் மூலமாக கோவை தொப்பம்பட்டியைச் சேர்ந்த 17 வயது பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர், இருவரும் செல்போன் எண்களை பரிமாறிக் கொண்டு அடிக்கடி பேசி வந்துள்ளனர்.
ரஞ்சித் தனக்கு ஏற்கனவே திருமணமானதை மறைத்து, சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி பழகி வந்துள்ளார். இரண்டு பேரும் அடிக்கடி நேரில் சந்தித்து, தங்களது காதலை வளர்த்து வந்தனர். இந்த காதல் விவகாரம் சிறுமியின் வீட்டுக்கு தெரிய வரவே வீட்டில் எதிர்ப்பு கிளம்பியது. அவர்கள், தங்களது மகளை கண்டித்தனர். மேலும், வாலிபர் உடனான காதலை கைவிடுமாறு அறிவுரை கூறி காதலை கைவிடுமாறு எச்சரித்தனர்.
இதனால், ஆத்திரமடைந்த ரஞ்சித் நேற்று முன்தினம், சிறுமியின் வீட்டிற்கே சென்று, அவரின் பெற்றோரிடம் திருமணம் செய்து வைக்கும்படி கூறியுள்ளார். இதனால், அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டதால், அந்த இளம் பெண்ணின் பெற்றோருக்கு கொலை மிரட்டல் விடுத்தார். மேலும், தன்னுடன் அந்த இளம் பெண் சேர்ந்து எடுத்த படங்களை மார்பிங் செய்து ஆபாசமாக சமூக வலைதளங்களில் பதிவிட்டு விடுவதாக மிரட்டி விட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
இதுகுறித்து சிறுமியின் தாய் துடியலூர் போலீசில் புகார் தெரிவித்தார். போலீசார் இன்பர்மேஷன் டெக்னாலஜி ஆக்ட் 2000 படி 294 பிரிவில் வழக்கு பதிவு செய்து மிரட்டல் விடுத்த ரஞ்சித்தை கைது செய்தனர். பின்பு, அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கடந்த சில வருடங்களுக்கு முன்பு ரஞ்சித்தும், நேபாள நாட்டைச் சேர்ந்த ஒரு பெண்ணும் காதலித்து திருமணம் செய்துள்ளனர். பின்னர், இரண்டு பேருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக அந்த பெண்ணை ரஞ்சித்தை பிரிந்து சென்று விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.