திருப்பூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 81 பேருக்கு தொற்று - மொத்த பாதிப்பு 14,065 ஆக உயர்வு!

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 81 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 81 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் தீவிரமடைந்துள்ளதன் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில், திருப்பூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 81 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாவட்டத்தின் மொத்த பாதிப்பு 14,065 ஆக அதிகரித்துள்ளது.

இதனிடையே, திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று சிகிச்சை பெற்று வந்த 101 பேர் குணமடைந்தனர். இதன் மூலம் திருப்பூரில் இதுவரை 12,903 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

அதேபோல, திருப்பூரில் இன்று கொரோனா தொற்று சிகிச்சை பலனின்றி இன்று மேலும் ஒருவர் உயிரிழந்தார். இதன் மூலம் திருப்பூர் மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்றுக்கு 200 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 962 பேர் நோய் தொற்று பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கோவை மாவட்டத்தை தொடர்ந்து, தற்போது திருப்பூரிலும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவது பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...