சார்ஜாவில் இருந்து கோவை வந்த விமானத்தில் நூதன முறையில் தங்கம் கடத்தலில் ஈடுபட்ட இருவர் கைது - ரூ.1 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்!

கோவை: சார்ஜாவில் இருந்து கோவை வந்த விமானத்தில் நூதனமான முறையில் இடுப்பில் சுற்றி வந்த ரூ.1 கோடி மதிப்பிலான தங்கத்தை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள், கடத்தலில் ஈடுபட்ட இருவரை கைது செய்தனர்.


கோவை: சார்ஜாவில் இருந்து கோவை வந்த விமானத்தில் நூதனமான முறையில் இடுப்பில் சுற்றி வந்த ரூ.1 கோடி மதிப்பிலான தங்கத்தை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள், கடத்தலில் ஈடுபட்ட இருவரை கைது செய்தனர்.

சார்ஜாவில் இருந்து கோவைக்கு வந்த விமானத்தில் நூதனமான முறையில் இடுப்பில் ரசாயன பேஸ்ட் கலந்து சுற்றிவந்த தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் கைப்பற்றினர். கடத்தி வந்த 2 வாலிபர்களை கைது செய்தனர். ஒரே நாளில் ஒரு கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

வளைகுடா நாடான சார்ஜா கோவை இடையே ஏர் அரேபியா விமானம் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று அதிகாலை 5.30 மணிக்கு சார்ஜாவில் இருந்து ஏர் அரேபியா விமானம் கோவைக்கு வந்தது.

இந்த விமானத்தில் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வருவதாக சுங்க இலாகா அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து, விமானத்தில் வந்து இறங்கிய பயணிகள் மற்றும் அவர்களது உடமைகளை சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது, பயணிகள் 2 பேர் நூதன முறையில் தங்கத்தைப் பொடியாக்கி சில ரசாயன பேஸ்ட் கலந்து ஸ்கேனர் தெரியாத அளவுக்கு தங்களது இடுப்பு பகுதியில் மறைத்து வைத்து கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, அவர்களிடமிருந்து 1.2 கிலோ கிராம் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூபாய் 62 லட்சத்து 66 ஆயிரம் 2 பேரையும் சுங்க இலாகா அதிகாரிகள் கைது செய்தனர்.

மேலும், அவர்களிடம் தங்கத்தை யார் கொடுத்தது? யார் இடம் கொடுப்பதற்காக கடத்தி வந்தார்கள்? என அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல், அந்த விமானத்தில் வந்த ஐந்து பயணிகளிடம் சந்தேகத்தின் பேரில் அதிகாரிகள் செய்த சோதனையில் ரூபாய் 46 லட்சம் மதிப்பிலான தங்கம் மற்றும் பிற சரக்கு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

இதனிடையே, நேற்று ஒரே நாளில் சுங்க இலாகா அதிகாரிகள் மொத்தம் 1 கோடியே 1 லட்சத்து 60 ஆயிரம் மதிப்புள்ள தங்கத்தை பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் விமான நிலைய பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்துறை கணிதம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் இணைந்து தொழில்துறை...

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.206) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உய...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...