நொய்யல் ஆறு புனரமைப்பு என்ற பெயரில் மக்களின் வரிப் பணத்தை வீணாக்கும் செயலை கண்டு இனியும் பொறுத்திருக்க முடியாது - நா.கார்த்திக் எம்எல்ஏ

கோவை: நொய்யல் ஆறு புனரமைப்பு என்ற பெயரில் நடைபெறும் பணிகளில், மக்களின் வரிப் பணத்தை வீணாக்கி, மக்களுக்கும், நீருக்கும், நிலத்துக்கும் கேடு விளைவிக்கும் செயலை கண்டு இனியும் பொறுத்திருக்க முடியாது என்று நா.கார்த்திக் எம்எல்ஏ தெரிவித்தார்.



கோவை: நொய்யல் ஆறு புனரமைப்பு என்ற பெயரில் நடைபெறும் பணிகளில், மக்களின் வரிப் பணத்தை வீணாக்கி, மக்களுக்கும், நீருக்கும், நிலத்துக்கும் கேடு விளைவிக்கும் செயலை கண்டு இனியும் பொறுத்திருக்க முடியாது என்று நா.கார்த்திக் எம்எல்ஏ தெரிவித்தார்.

கோவை, நஞ்சுண்டாபுரம், மேற்குபுதூர் பகுதியில் நடைபெற்று வரும் நொய்யல் ஆறு தடுப்பணை கட்டும் பணிகளை கோவை மாநகர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்எல்ஏ அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் கோவை மாநகர் கிழக்கு மாவட்ட தி.மு.க பொறுப்பாளர் நா. கார்த்திக் எம்எல்ஏ செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசியதாவது:-

ரூ.230 கோடி மதிப்பீட்டில், நொய்யல் ஆற்றை காரணம் காட்டி, மக்கள் வரிப்பணத்தை வீணடிக்கிறார்கள். அதிமுக ஆட்சியில் மக்கள் மட்டுமல்ல, பல்லுயிரும் பாழாய் போவதற்கு பல திட்டங்கள் உருவாக்கப் படுகின்றன.

நொய்யல் நீர் வழித்தடங்களில் உள்ள எந்த குளங்களையும் தூர் வாராமல் நீர்நிலைகளை எவ்வாறு காக்கமுடியும்?

எந்த ஒரு ஆய்வும், முறையான திட்டமிடலும் இல்லாது, உலகத்தில் எந்தவொரு ஆறும் இதுபோன்ற ஒரு முறையில் புனரமைக்கப்பட்டதில்லை. ஊழல் முறைகேடுகள் செய்வதற்காக மட்டுமே புனரமைப்பு என்ற பெயரில் பணிகள் செய்யப்படுகிறது.

கடந்த 05.06.2020 அன்று, 230 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நொய்யல் ஆற்றை புனரமைத்தல் என்ற பெயரில் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார். நொய்யல் ஆறு குறித்து எந்த ஒரு ஆய்வும், போதிய திட்டமிடலும் இல்லாமல் தேர்தலையும், தேர்தல்களுக்கான செலவுகளையும் கருத்தில் கொண்டு ரூ.230 கோடி வளர்ச்சி பணி என்ற பெயரில் நொய்யல் ஆற்றை காரணம் காட்டி அதன் உயிர்ச்சூழலைச் சிதைக்கும் பணியில் ஈடுபடுகின்றனர்.

ஒரு ஆற்றின் நீர் ஆதாரங்களை புதுப்பிக்க அதன் நீரோடைகளை மீட்பது, தடுப்பணைகளை அமைத்தல், நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பசுமை பரப்பை அதிகரித்தல், நில அளவை செய்து அதன் அறுதியினை நிர்ணயித்தல், ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், சாக்கடை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைத்தல், குப்பைகள் மற்றும் மாசுக்களை தடுத்தல், குளங்களின் கொள்ளளவை அதிகரிக்க தூர் வாருதல் போன்ற எந்த ஒரு முறையான பணியும் இல்லாது , உலகத்தில் எந்தவொரு ஆறும் இதுபோன்ற ஒரு முறையில் புனரமைக்கப்பட்டதில்லை.

ஏரி, குளங்களை ஆழப்படுத்தாமல், ஏரிகளின் கரைகளை மட்டும் பலப்படுத்துகிறேன் என்ற பெயரில், நம் முன்னோர்கள் கட்டமைத்த குளங்களின் உயிர்ச்சூழலை கெடுக்கும் விதமாக, மத்திய மாநில அரசுகளின் வழிகாட்டு நெறிமுறைகள் எதுவும் இல்லாது, ஊழல், முறைகேடுகள் செய்வதற்கு ஏற்ற வகையில், குளக்கரைகளில் கான்கிரீட்களை கொட்டி மக்கள் வரிப்பணத்தை வீணடிக்கிறார்கள்.



நஞ்சுண்டாபுரம், மேற்குபுதூர் பகுதியில் நடைபெற்று வரும் நொய்யல் ஆறு தடுப்பணை கட்டுமானப் பணிகளுக்கு பயன்படுத்தப்படும் பொருள்கள் அனைத்தும் தரமில்லாத பொருள்களைக் கொண்டு, தரமற்ற நிலையில் பணிகள் நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. நொய்யல் ஆறு புனரமைப்பு பணியில் பெரும் ஊழல் முறைகேடு நடக்கிறது. மேலும் இவர்கள் ஆட்சியில் மக்கள் மட்டுமல்ல, பல்லுயிரும் பாழாய் போவதற்கு பல திட்டங்கள் உருவாக்கப் படுகின்றன.

கடந்த 5 ஆண்டுகளாக நொய்யல் நீர் வழித்தடங்களை தூர் வாரக் கோரி கோவை மாநகர் கிழக்கு மாவட்ட திமுக சார்பில், கோவை மாநகராட்சி ஆணையாளரிடத்தில் பொதுமக்களையும் அழைத்துக் கொண்டு நேரில் சென்று, பலமுறை கோரிக்கை மனுக்கள் அளித்தும் எந்த ஒரு வழித் தடமும் இதுவரை தூர் வாரப்படவில்லை. நொய்யல் நீர் வழித்தடங்களில் உள்ள எந்த குளங்களையும் தூர் வாராமல் நீர்நிலைகளை எவ்வாறு காக்கமுடியும்?

இத்திட்டத்தின் முழு விவரம் குறித்து விவசாயிகள், எதிர்க்கட்சிகள், மக்கள் பிரதிநிதிகள், ஊடக நண்பர்கள் இவர்கள் யாருக்கும் தெரிவிக்காமல், முழு திட்ட அறிக்கையை பொது வெளியில் எங்கும் வெளியிடாமலும், கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தாமலேயே அதிகாரத்தைக் கொண்டு இத்திட்டத்தை உருவாக்கி செயல்படுத்தி வருகின்றனர்.



தற்போது நொய்யல் ஆறு புனரமைப்பு என்ற பெயரில் நடைபெறும் பணிகளில், மக்களின் வரிப் பணத்தை வீணாக்கி, மக்களுக்கும், நீருக்கும், நிலத்துக்கும் கேடு விளைவிக்கும் செயலை கண்டு இனியும் பொறுத்திருக்க முடியாது. இதனை இனியும் சரி செய்யாது இருந்தால், கோவை மாநகர் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் நீதித்துறையை அணுகி சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும், பொதுமக்களை திரட்டி அறவழி போராட்டத்தை நடத்தவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கிறேன், இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Newsletter

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.206) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உய...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...