கோவையில் மோட்டார் சைக்கிள் வாங்கித்தராத விரக்தியில் என்ஜினியரிங் மாணவர் தூக்கிட்டு தற்கொலை!

கோவை: கோவையில் மோட்டார் சைக்கிள் வாங்கித்தராத விரக்தி என்ஜினியரிங் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோவையில் மோட்டார் சைக்கிள் வாங்கித்தராத விரக்தியில் என்ஜினியரிங் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கோவை செல்வபுரம் அருகே உள்ள ஏஸ்.ஏ கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன் இவரது மகன் பிரசன்னா ஜெகதீஸ் (19), இவர் மலுமிச்சம்பட்டியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.

இந்நிலையில், அவர் கடந்த சில மாதங்களாக தனது பெற்றோரிடம் தனக்கு புதியதாக மோட்டார் சைக்கிள் வாங்கிக் கொடுக்கும்படி கேட்டு வந்துள்ளார். ஆனால், அவர்கள் அதற்கு எந்த ஒரு பதிலும் தெரிவிக்காமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் கடந்த சில நாட்களாக பிரசன்னா ஜெகதீஷ் மிகுந்த மனவேதனையுடன் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், இன்று வீட்டில் அவர் தனியாக இருந்த போது, விரக்தியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மகன் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர்கள், இதுகுறித்து செல்வபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

பின்னர், உடனடியாக போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தற்கொலை செய்துகொண்ட பிரசன்ன ஜெகதீஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் 174 மற்றும் 176 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்துறை கணிதம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் இணைந்து தொழில்துறை...

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.206) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உய...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...