ரூ.10 ஆயிரம் கடன்: வங்கிகளில் சாலையோர வியாபாரிகள் அலைக்கழிப்பு..! காலவதியான அடையாள அட்டைகளை புதுபித்து தர கோரிக்கை

கோவை: கொரோனா கால சிறப்பு கடனாக மத்திய அரசு அறிவித்துள்ள ரூ.10 ஆயிரம் கடன் பெறுவதற்காக வங்கிகளில் சாலையோர வியாபாரிகள் தொடர்ந்து அலைக்கழிக்கப்படுவதாக எழுந்துள்ளது.


கோவை: கொரோனா கால சிறப்பு கடனாக மத்திய அரசு அறிவித்துள்ள ரூ.10 ஆயிரம் கடன் பெறுவதற்காக வங்கிகளில் சாலையோர வியாபாரிகள் தொடர்ந்து அலைக்கழிக்கப்படுவதாக எழுந்துள்ளது.

கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சுமார் 6 ஆயரத்திற்கும் மேற்பட்ட பதிவு பெற்ற சாலையோர வியாபாரிகள் உள்ளனர். பதிவு பெறாமல் சுமார் 12 ஆயிரம் சாலையோர வியாபாரிகள் உள்ளனர். கொரோனா ஊரடங்கு காரணமாக சாலையோரம் மற்றும் நடைபாதை வியாபாரிகள் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டது.

இதனிடையே, சாலையோர வியாபாரிகளுக்கு ரூ.10 ஆயிரம் சிறப்பு கடன் வழங்கப்படும், என மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது.

இதற்காக, மாநகராட்சி சார்பாக சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு, ஆவணங்கள் பெறப்பட்டு அதனை இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்து வங்கி கடன்கள் பெற ஏற்பாடு செய்யப்பட்டது.

கோவை மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடந்த சிறப்பு கடன் பெற வழிநடத்தும் முகாம்களில், ஆயிரக்கணக்கான சாலையோர வியாபாரிகள் கலந்துக்கொண்டு தங்களிடம் உள்ள ஆவணங்களை சமர்பித்தனர். இதனிடையே, சாலையோர வியாபாரிகளுக்கு மாநகராட்சி சார்பாக வழங்கப்பட்ட அடையாள அட்டை இன்னமும் புதுபிக்கப்படவில்லை என்ற புகார் எழுந்துள்ளது.

இது குறித்து, கோவை மாவட்ட சாலையோர மற்றும் நடைபாதை வியாபாரிகள் நலச்சங்கம் தலைவர் மணி கூறுகையில்:

மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட ரூ.10 ஆயிரம் கடனை பெற விண்ணப்பித்தது தொடர்பாக வங்கிகளிடம் சென்று கேட்டால், அது தொடர்பாக எந்த பதிலும் அளிக்காமல் சாலையோர வியாபாரிகள் தொடர்ந்து அலைகழிக்கப்படுகிறார்கள். இதுவரை, சுமார் 1000 பேர் வரை மட்டுமே கடன் பெற்றுள்ளனர்.

சில வங்கிகளில் சாலையோர வியாபாரிகளுக்கான அடையாள அட்டை காலவதியாகிவிட்டது, புதிய அட்டையுடன் வாருங்கள் என்கின்றனர். மாநகராட்சி சார்பாக புதிய அட்டைகள் இன்னமும் வழங்கப்படவில்லை. எனவே, சாலையோர வியாபாரிகளுக்கு புதிய அட்டைகள் வழங்கப்பட வேண்டும். கொரோனா கால சிறப்பு கடனை பெற்று தர மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

Newsletter

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.206) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உய...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...