கோவை: கோவையில் ஏலச்சீட்டு நடத்தி மக்களிடம் பணத்தை பெற்று ஏமாற்றி தலைமறைவான பேராசிரியர் மற்றும் மனைவியை போலீசார் தேடி வருகின்றனர். மேலும் உறவினர் ஒருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இதுகுறித்து கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கூறியிருப்பதாவது:-
சூலூர் காங்கேயம் பாளையத்தைச் சேர்ந்த தாமோதரசாமி என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் ஒரு புகார் மனு அளித்தார்.
அந்த மனுவில் காளப்பட்டி, விரையன்பாளையம் ரோடு, கே பி கே நகர் பொன் இல்லம் பகுதியில் வசிப்பவர் கிருஷ்ணராஜ். அவர் பொள்ளாச்சியில் உள்ள பாரதியார் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருக்கிறார். அவரிடம் நான் உட்பட பலர் ஆன்லைன் டிரேடிங் (M/s Nexus கம்பெனி மூலமாக பணத்தை தருவதாக கூறி ரூ.5 கோடி மோசடி செய்துள்ளார் என்று புகார் கூறியிருந்தார்.
இந்நிலையில், இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில் திடுக்கிடும் சம்பவங்கள் வெளியாகின. கிருஷ்ணராஜ் மற்றும் அவருடைய மனைவி கல்யாணி, அவருடைய உறவுக்காரர் சண்முகம் ஆகியோர் கூட்டாக சேர்ந்து ஏலச்சீட்டு நடத்தி வந்தனர். அதில் பலர் பணம் போட்டு தொடர்ந்து அதில் பயன் பெற்று வந்துள்ளனர்.
இதனிடையே, கிருஷ்ணராஜ் ஆன்லைன் டிரேடிங் என்ற ஒரு கம்பெனியை உருவாக்கி உள்ளார். இதிலும் பணத்தை போட்டால் நல்ல லாபம் கிடைக்கும் என்று ஆசை வார்த்தை கூறி உள்ளனர். இந்த நிறுவனம் கடந்த 27.4.2019 முதல் 31.8.2020, வரை நடத்தப்பட்டுள்ளது.
இந்த நிறுவனத்தில் ஈரோட்டைச் சேர்ந்த செங்கோட்டையன் என்பவர் 75 லட்சமும், பிரசாந்த் என்பவர் 25 லட்சமும், மணி செந்தில் குமார் என்பவர் 28 லட்சமும், குரு மூர்த்தி என்பவர் 51 லட்சமும், குணசீலன் என்பவர் 25 லட்சமும், சிவக்குமார் என்பவர் 7 லட்சமும், ஹரி கிருஷ்ணன் என்பவர் 20 லட்சமும், கமலம் என்பவர் 70 வீதமும், மேலும் பலர் இதில் பல லட்சங்களை முதலீடு செய்துள்ளன. அதனுடைய தற்போதைய பணம் முதலீட்டு மதிப்பு 5 கோடி ஆகும். இந்நிலையில் தலைமறைவான அவர்களை போலீசார் தேடி வந்தனர்.
இந்த நிலையில், பொள்ளாச்சியில் உள்ள அவரது வீட்டில் பதுங்கியிருந்த சண்முகத்தை இன்று போலீசார் கைது செய்து, பொள்ளாட்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
மேலும், தலைமறைவாக உள்ள பேராசிரியர் கிருஷ்ணராஜ் மற்றும் கல்யாணியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இவர்கள் மீது 406, 420, 120b ஐபிசி பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.