கோவை: கோவையில் மாரடைப்பு காரணமாக பயிற்சி உதவி காவல் ஆய்வாளர் உயிரிழந்த சம்பவம் காவல்துறையினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலையத்தில் பயிற்சி உதவியாளராக 21. 10.2020 -முதல் பணி புரிந்து வருபவர் பால் அலெக்சாண்டர் (52). இவர் கோவை கணபதி மாநகர் போலீஸ் குவாட்டர்ஸில் குடியிருந்து வருகிறார். பெரியநாயக்கன் பாளையம் காவல் நிலையத்தில் பயிற்சி அளிக்கக்கூடிய உதவி ஆய்வாளராக உள்ளார்.
மேலும், அவருக்கு மார்க்கெட் (47) என்ற மனைவியும், கெப்சிவா (16) மகளும், ஜோஸ்வா (15) என்ற மகனும் உள்ளனர். இவர் நேற்று பணி முடித்துவிட்டு வீட்டிற்கு வந்து தூங்கிக்கொண்டிருந்தார்.
இந்நிலையில், இன்று அதிகாலை 1 மணி அளவில் அவருக்கு திடீரென நெஞ்சுவலி வந்தது. உடனடியாக வீட்டில் உள்ளவர்கள் கோவை கே.ஜி தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
ஆனால், பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக கூறினர். இவருடைய சொந்த ஊர் கரூர் மாவட்டம் பொன்னிலை துக்காச்சி ஆகும்.
பயிற்சி அளிக்கக்கூடிய உதவி ஆய்வாளர் உயிரிழந்த சம்பவம் பெரியநாயக்கன் பாளையம் காவல்துறையினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.