கோவையில் மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்திய கல்லூரி மாணவர்கள் இருவர் கைது - 2 கிலோ கஞ்சா பறிமுதல்!

கோவை: கோவையில் மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்திய கல்லூரி மாணவர்களை கைது செய்த போலீசார் 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.


கோவை: கோவையில் மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்திய கல்லூரி மாணவர்களை கைது செய்த போலீசார் 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கோவையில் இன்று அதிகாலை மதுக்கரை மரப்பாலம் கீழே போலீசார் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக கே.டி.எம் பைக்கில் இருவர் அதிவேகமாக வந்து கொண்டிருந்தனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி வாகனத்தை சோதனை செய்தனர்.

அப்போது, மோட்டார் சைக்கிளில் இரண்டு கிலோ கஞ்சா பொட்டலம் இருப்பது தெரிய வந்தது. உடனே அவர்களிடம் இருந்த கஞ்சாவை மீட்டு இருவரையும் போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் விசாரணை செய்ததில் திருச்சூர், பாலகிபரம்பு, கல்லூர் அஞ்சல், முரளி மகன் அகில் (20) என்பதும், திருச்சூர், தெக்குமுரி, மாகோது வீடுட பகுதியில் வசிக்கக்கூடிய சாஜன் மகன் சாரோன் (20) என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து, இவர்கள் ஓட்டி வந்த கே.டி.எம் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. இவர்கள் இருவரும் திருச்சூரில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாமாண்டு படித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்துறை கணிதம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் இணைந்து தொழில்துறை...

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.206) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உய...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...