சென்னை: தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு ஒத்திவைக்க படுவதாகவும், சூழ்நிலைக்கேற்ப பள்ளிகள் திறப்பு தேதி அறிவிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
சென்னை: தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு ஒத்திவைக்கப் படுவதாகவும், சூழ்நிலைக்கேற்ப பள்ளிகள் திறப்பு தேதி அறிவிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் திறப்பில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அதேநேரம் பள்ளிகள் திறக்காத நிலையில், ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்படுகிறது.
இதனிடையே, பள்ளி, கல்லூரிகளை வரும் நவம்பர் 16ம் தேதி முதல் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்தது.
இதையடுத்து, பள்ளிகள் திறப்பு விவகாரத்தில் பெற்றோர்களின் கருத்துகளை அறிய கடந்த நவ.9 ஆம் தேதி கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தப்பட்டது. அதில் பெரும்பாலான பெற்றோா்கள் பள்ளிகள் திறப்பை ஒத்திவைக்க வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.
இதனிடையே, ஆந்திரம் உள்ளிட்ட பல மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டநிலையில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. பல நாடுகளில் கொரோனாவின் இரண்டாம் கட்டஅலை பரவி வருகிறது.
எனவே, டிசம்பருக்கு பிறகு பள்ளி, கல்லூரிகளைத் திறக்கலாம் என நீதிமன்றம் கருதுகிறது. மேலும் பள்ளி, கல்லூரிகளைத் திறப்பதில் பிற மாநிலங்களில் நடைபெற்ற நிகழ்வுகளைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு முடிவெடுக்கவேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை புதன்கிழமை கருத்துத் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், 9,10,11,12ம் வகுப்புகள் வரை பள்ளி, கல்லூரிகள் நவம்பர் 16 முதல் செயல்படும் என்ற அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு ஒத்திவைக்கப் படுவதாகவும், சூழ்நிலைக்கேற்ப பள்ளிகள் திறப்பு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
அதேசமயம், டிசம்பர் 2ம் தேதி முதல் முதுநிலை இறுதியாண்டு அறிவியல், தொழில்நுட்ப மாணவர்களுக்கான கல்லூரி, பல்கலை வகுப்புகள் தொடங்கும். அதேசமயம் இதர வகுப்பு மாணவர்களுக்கு கல்லூரி திறப்பு தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
டிசம்பர் 2ம் தேதி முதல் திறக்கப்படும் முதுநிலை இறுதியாண்டு அறிவியல், தொழில்நுட்ப மாணவர்களுக்கான கல்லூரி, பல்கலை விடுதிகள் மட்டும் அன்று முதல் செயல்படும். கல்லூரி விடுதிகளுக்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் தனியாக வெளியிடப்படும் என தமிழக தெரிவித்துள்ளது.
பிற மாணவர்களுக்கு ஏற்கனவே நடைபெற்று வரும் இணையவழிக் கல்விமுறை தொடர்ந்து நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சமுதாய, அரசியல், பொழுதுபோக்கு, கலாச்சார நிகழ்வுகள், கல்வி சார்ந்த விழாக்கள், மதம் சார்ந்த கூட்டங்களில் நூறு பேருக்கு மிகாமல் பங்கேற்கும் வகையில் அனுமதிக்கப்பட்டிருந்த உத்தரவும் ரத்து செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.