தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோவை கொடிசியா தற்காலிக பேருந்து நிலையத்தில் இன்று முதல் 186 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

கோவை: கோவையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கொடிசியா மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பேருந்து நிலையத்தில் இன்று முதல் 186 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.


கோவை: கோவையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கொடிசியா மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பேருந்து நிலையத்தில் இன்று முதல் 186 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

தீபாவளி பண்டிகையையொட்டி ஆண்டுதோறும் கோவையில் இருந்து அண்டை மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். இந்த ஆண்டு நாளை மறுநாள் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.

இந்நிலையில், கோவை மாவட்டத்தில் பணியாற்றும் பல்லாயிரக்கணக்கானோர் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று பண்டிகையை கொண்டாட வசதியாக கோவையில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு 186 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

மாநகரில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த அவிநாசி சாலையில் உள்ள கொடிசியா மைதானத்தில் அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கும் பணி கடந்த திங்கட்கிழமை தொடங்கி நடைபெற்று வந்தது.

இதனிடையே, நேற்று பணிகள் நிறைவடைந்த நிலையில் இன்று முதல் தற்காலிக பேருந்து நிலையத்திலிருந்து திருச்சி, சேலம் உள்ளிட்ட பல்வேறு வழித்தடங்களில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தற்காலிக பேருந்து நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக நிழற்குடை, கழிவறை, குடிநீர் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

தீபாவளி பண்டிகை முடிந்து மீண்டும் கோவை திரும்ப வரும் 16ம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்துறை கணிதம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் இணைந்து தொழில்துறை...

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.206) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உய...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...