ஆனைமலை மாசாணியம்மன் கோயில் நடை வரும் 14ம் தேதி, சனிக்கிழமை இரவு அடைக்கப்படும் - நிர்வாகம் அறிவிப்பு

பொள்ளாச்சி: பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை மாசாணியம்மன் கோயிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் பக்தர்கள் அதிக அளவில் தரிசனத்திற்காக வந்து செல்வார்கள்.

பொள்ளாச்சி: பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை மாசாணியம்மன் கோயிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் பக்தர்கள் அதிக அளவில் தரிசனத்திற்காக வந்து செல்வார்கள். 

குறிப்பாக, அமாவாசை, வெள்ளி, சனி, ஞாயிறு மற்றும் முக்கிய விஷேச நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் இருக்கும். தினசரி காலை 6 மணிக்கு நடை திறந்து இரவு 8 மணிக்கு மூடப்படும். வழக்கமாக, அமாவாசைக்கு முந்தைய நாள் இரவு கோயில் நடை மூடப்படாமல் இரவு முழுவதும் பக்தர்கள் தரிசனத்திற்காக திறந்திருக்கும். 

இந்நிலையில், கொரோனா தொற்று காரணமாக வரும் 14ம் தேதி சனிக்கிழமை இரவு அமாவாசைக்கு முந்தையை நாள் இரவு 8 மணிக்கு நடை அடைக்கப்படும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

பண்டிகை நாள் மற்றும் அமாவாசை என்பதால் அதிகமான பக்தர்கள் அமாவாசைக்கு முந்தைய நாள் இரவு கோயில் நடை திறந்திருக்கும் என நினைத்து வந்து விடுவார்கள் என்பதற்காக, முன்கூட்டியே பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்துறை கணிதம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் இணைந்து தொழில்துறை...

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.206) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உய...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...