பெட்ரோல் பங்க் பெண் ஊழியரிடம் தகாத வார்த்தைகள் பேசி கொலை மிரட்டல் விடுத்த இருவர் மீது போலீசார் வழக்குப்பதிவு

பொள்ளாச்சி: வடக்கிபாளையம் ரோட்டில் உள்ள பெட்ரோல் பங்கில் பெண் ஊழியரிடம் தகாத வார்த்தைகள் பேசி கொலை மிரட்டல் விடுத்த இருவர் மீது தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

பொள்ளாச்சி: வடக்கிபாளையம் ரோட்டில் உள்ள பெட்ரோல் பங்கில் பெண் ஊழியரிடம் தகாத வார்த்தைகள் பேசி கொலை மிரட்டல் விடுத்த இருவர் மீது தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

பொள்ளாச்சியை சேர்ந்த கனகராஜ் என்பவர் கோவை - வடக்கிபாளையம் ரோடு பிரிவு பகுதியில் உள்ள இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்கில் பணியாற்றி வந்துள்ளார். பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனை காரணமாக கடந்த சில தினங்களுக்கு முன்பு இவர் பணியில் இருந்து நீக்கப்பட்டதாக தெரிகிறது. 

இந்நிலையில், நேற்று கனகராஜ் மற்றும் அவரது உறவினர் காலிங்கராஜ் ஆகிய இருவரும் பெட்ரோல் பங்கில் சென்று தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதை தட்டி கேட்ட பெட்ரோல் பங்க் காசாளர் வினோதாவை தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக, கூறப்படுகிறது.

இதை தொடர்ந்து, பெண் காசாளர் பொள்ளாச்சி தாலுக்கா போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து, காலிங்கராஜ் மற்றும் கனகராஜ் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார், இருவரையும் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்துறை கணிதம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் இணைந்து தொழில்துறை...

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.206) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உய...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...