கோவை அருகே வாடகைக்கு வீடு தேடுவது போல் நடித்து மூதாட்டியிடம் நகை திருட்டு

கோவை: தனியாக இருந்த மூதாட்டியிடம் வீடு வாடகைக்கு கேட்பது போல் நடித்து நகை திருடி சென்ற ஆசாமியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.


கோவை: தனியாக இருந்த மூதாட்டியிடம் வீடு வாடகைக்கு கேட்பது போல் நடித்து நகை திருடி சென்ற ஆசாமியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- கோவை பெரியநாயக்கன்பாளையம், அடுத்த வீரபாண்டி புதூர், பெருமாள் வீதியைச் சேர்ந்தவர் சரோஜினி (வயது 75), இன்று இவர் வீட்டில் தனியாக இருந்தார்.

இதையறிந்த, மர்ம வாலிபர் அங்கு வந்த சரோஜினியிடம் வீடு வாடகைக்கு கேட்பது போல் பேசியுள்ளார்.அப்போது அந்த வாலிபர், குடிக்க தண்ணீர் கேட்டுள்ளார், சரோஜினி தண்ணீர் எடுக்க சமையலறைக்குச் சென்ற போது, அந்த வாலிபர் வீட்டுக்குள் புகுந்து மேஜை மீது இருந்த 3 பவுன் தங்க நகையை திருடிச்சென்றார்.

இதை அறியாத சரோஜினி தண்ணீரை எடுத்து வந்து அந்த வாலிபரை தேடி பார்த்தார். பின்னர், உள்ளே சென்று பார்த்தபோது மேஜை மீது இருந்த 3 பவுன் தங்க நகை திருடு போய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து, சரோஜினி அவரது மகன் அரவிந்த் பாபுவிற்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து, அரவிந்த் பெரிய நாயக்கன்பாளையம் போலீசில் புகார் தெரிவித்தார்.

ஐ பி சி 379 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீஸார், நகையை திருடி சென்ற மர்ம வாலிபரை தேடி வருகின்றனர்.

Newsletter

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.206) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உய...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...