கோவை-: கோவையில் இன்று மாலை 3 மணிக்கு திமுக மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கோவை விமான நிலையம் வந்தார்.

அப்போது, கோவை திமுக எம்.எல்.ஏ கார்த்திக் தலைமையில் கட்சி நிர்வாகிகள் 300 -க்கும் மேற்பட்டோர் விமான நிலைய வளாகத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
கோவை மாவட்ட நிர்வாகிகளை விமான நிலையத்தில் சந்தித்து விட்டு, பின் அங்கிருந்து பல்வேறு மாவட்டங்களின் இளைஞரணி நிர்வாகிகள் நியமன கூட்டங்களில் பங்கேற்க, உதயநிதி ஸ்டாலின் நாமக்கல்லுக்கு கார் மூலமாக புறப்பட்டுச் சென்றார்.
வரும் 13 ஆம் தேதி, கோவை மாவட்ட இளைஞர் அணியின் புது நிர்வாகிகளை தேர்வு செய்ய, உதயநிதி ஸ்டாலின் கோவைக்கு வருவார் என்று கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.
இந்த நிலையில், பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், முறையற்ற வகையில் கார்களை விமான நிலைய வளாகம் அருகே நிறுத்திவிட்டு சென்றவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் அதில் திமுக கட்சியனரின் கார்களும் அடங்கும், என உளவுத் துறையினர் தெரிவித்தனர்.
பீளமேடு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.