கோவை: கோவையில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் திருமண ஆசை கூறி கடத்திச் சென்று கட்டாய திருமணம் செய்ய முயற்சி செய்த வாலிபரை போலீசார் கைது செய்து போக்சோவில் சிறையில் அடைத்தனர்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- கேரளா மாநிலம், பாலக்காட்டைச் சேர்ந்தவர் 15 வயது சிறுமி. இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அந்த மாணவி, கோவை சின்னவேடம்பட்டியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு வந்துள்ளார்.
அப்போது, கடந்த 6- ஆம் தேதி வீட்டில் இருந்த மாணவி திடீரென மாயமானார். பதற்றம் அடைந்த, உறவினர்கள் அக்கம் பக்கத்தில் தேடி பார்த்தும், கண்டுபிடிக்க முடியாததால் இது குறித்து போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவியை தேடி வந்த நிலையில், மாணவியை கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதியைச் சேர்ந்த சஞ்சீவி (22), என்ற வாலிபர் கடத்தி சென்று திருமணம் செய்ய முயற்சி செய்துள்ளார், என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து, போலீசார் உடனடியாக அங்கு விரைந்து சென்று சிறுமியை மீட்டனர்.
மேலும், சிறுமியை கடத்திய சஞ்சீவி மீது போஸ்கோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.