நீலகிரி: டேன் டீ தொழிலாளர்களுக்கு 20 சதவீதம் போனஸ் வழங்கக் கோரி 300க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் டேன் டீ தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நீலகிரி மாவட்டம் குன்னூர், கோத்தகிரி, கூடலூர் பாண்டியாறு, நெல்லியாளம், சேரங்கோடு, சேரம்பாடி, கொளப்பள்ளி மற்றும் நடுவட்டம் பகுதியில் தமிழ்நாடு அரசு தேயிலை தோட்டங்கள் உள்ளன. இங்கு நிரந்தர மற்றும் தற்காலிக தொழிலாளர்கள் என 10 ஆயிரம் பேர் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில், தீபாவளி பண்டிகையையொட்டி தோட்ட தொழிலாளர்களுக்கு 10 சதவீதம் போனஸ் வழங்குவதாக நிர்வாக தரப்பு அறிவித்திருந்தது. இதற்கு எதிரப்பு தெரிவித்து 20 சதவீத போனஸ் வழங்க வேண்டும் என சி.ஐ.டி.யு, ஏ.ஐ.டி.யு.சி, எல்.பி.எப்., உள்பட பல தொழிற்சங்கங்கள் இணைந்து கோரிக்கை விடுத்து வருகிறது.
மேலும், தொழிலாளர்களும் இந்த மாத துவக்கத்தி்ல் இருந்து பல்வேறு போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், குன்னூர் கோத்தகிரியைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சிம்ஸ்பார்கில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு டேன் டீ தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு அங்கேயே தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.