கோவை பூ மார்க்கெட் மலர் அங்காடி புதிய வளாகம் விரைவில் திறப்பு - மாநகராட்சி ஆணையர் தகவல்!

கோவை: கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் பூ மார்க்கெட் மலர் அங்காடி புதிய வளாகத்தில் கட்டுமானப் பணிகள் 99 சதவீதம் முடிவடைந்துள்ள நிலையில், விரைவில் பூ வியாபாரிகளின் பயன்பாட்டிற்கு இந்த வளாகம் திறக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்தார்.


கோவை: கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் பூ மார்க்கெட் மலர் அங்காடி புதிய வளாகத்தில் கட்டுமானப் பணிகள் 99 சதவீதம் முடிவடைந்துள்ள நிலையில், விரைவில் பூ வியாபாரிகளின் பயன்பாட்டிற்கு இந்த வளாகம் திறக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்தார்.

கோவை, ஆர்.எஸ்.புரத்தில் உள்ள மாநகராட்சி பூ மார்க்கெட்டில் 95க்கும் மேற்பட்ட கடைகள் செயல்பட்டு வந்தன. இங்கு பெங்களூரு, திண்டுக்கல், சத்தியமங்கலம், சிறுமுகை, நீலகிரி, பொள்ளாச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் 20 டன்களுக்கும் மேல் பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. இங்கிருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு பூக்கள் அனுப்பப்படுகின்றன.

இந்நிலையில், கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக பூ மார்க்கெட் மாநகராட்சி அதிகாரிகளால் மூடப்பட்டது. பின்னர் தேவாங்க பள்ளி மைதானத்தில் பூக்கடைகள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டது.

இதனிடையே, பூ மார்க்கெட் பகுதியில் மாநகராட்சி சார்பில் ரூ.70 லட்சம் மதிப்பில் மலர் அங்காடி வளாகத்தில் 95 கடைகள் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. தற்போது 99 சதவீத பணிகள் முடிவடைந்தன.

இது குறித்து மாநகராட்சி ஆணைய‌ர் குமாரவேல் பாண்டியன் கூறுகையில், ‘‘பூ மார்க்கெட் மலர் அங்காடி பணிகள் 99 சதவீதம் முடிவடைந்துள்ளன. விரைவில் பூ வியாபாரிகளுக்கு கடைகள் ஒதுக்கப்பட்டு இந்த மலர் அங்காடி பயன்பாட்டிற்கு திறக்கப்படும். அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது,’’ என்று தெரிவித்தார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...