கோவை: ஏபிடி நிறுவனத்தில் 2019-2020 ஆண்டிற்கான போனஸ் உடன்பாடு இன்று எட்டப்பட்டது.
கோவை: ஏபிடி நிறுவனத்தில் 2019-2020 ஆண்டிற்கான போனஸ் பேச்சுவார்த்தையில் இன்று உடன்பாடு எட்டப்பட்டது.
கோவையை தலைமையிடமாக கொண்ட ஏபிடி பார்சல் சர்வீஸ், ஏஆர்சி, என்ஐஏ குரூப் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதில் சுமார் 1300 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிறுவனத்தின் கிளைகள் தமிழகம் மற்றும் ஆந்திரா, கேரளா, கர்நாடகா மற்றும் மஹாராஸ்ட்டிரா உள்ளிட்ட மாநிலங்களிலும் உள்ளது.
இந்நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கான 2019 - 2020 ஆண்டிற்கான போனஸ் குறித்த பேச்சுவார்த்தை நிர்வாகம் மற்றும் தொழிற்சங்கங்களிடையே நடைபெற்று வந்தது.
மூன்று சுற்று பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில், தற்செயல் விடுப்பு போராட்டத்திற்கு தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்தது. இதனையேற்று, தொழிலாளர்களும் விடுப்பு கடிதத்தை நிர்வாகத்திடம் அளித்தனர்.
இதனையடுத்து, செவ்வாயன்று இரவு மீண்டும் தொழிற்சங்க தலைவர்களை பேச்சுவார்த்தைக்கு நிர்வாகம் அழைப்பு விடுத்தது. இதில் 12 சதவீதம் போனஸ் உடன்பாடு எட்டப்பட்டது. இதில் சிஐடியு சார்பில் ஏபிடி சங்கத்தின் கௌரவ தலைவர் எஸ்.ஆறுமுகம்,தலைவர் ஆர். ஆறுமுகம் பொதுச்செயலாளர் அருணாச்சலம் ஐஎன்டியுசி சார்பில் பொதுச்செயலாளர் சண்முகசுந்தரம், பொருளாளர் விஜயகுமார் ஆகிய தொழிற்சங்க தலைவர்கள் பங்கேற்றனர்.
நிர்வாகத்தரப்பில் மனிதவள மேம்பாட்டு அதிகாரி பி.கிருஷ்ணமூர்த்தி, முதன்மை மேலாளர் சண்முகநாதன், உதவி பொது மேலாளர் கிருஷ்ணசாமி ஆகியோர் பங்கேற்றனர்.
இந்த நிலையில், கோவை பந்தய சாலையில் உள்ள ஏபிடி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் 2019 -2020 ஆம் ஆண்டிற்கான போனஸ் 12 சதவீதம் அளிப்பது எனவும், இதனை இரண்டு தவனையாக வழங்குவது எனவும் முதல் தவனை 8 சதவீதம் போனசை ஓரிரு நாட்களுக்குள் வழங்குவது எனவும் இரண்டாவது தவனை மீதம் 3.67 சதவீதத்தைப் பொங்கல் பண்டிகைக்கும் வழங்குவது என உடன்பாடு எட்டப்பட்டுக் கையெழுத்திட்டனர்.