தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோவை ரயில் நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு..! தீவிர சோதனைக்கு பின்னரே பயணிகள் அனுமதி!

கோவை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோவை ரயில் நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தீவிர சோதனைக்குப் பின்னரே பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர்.


கோவை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோவை ரயில் நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தீவிர சோதனைக்குப் பின்னரே பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர்.

தீபாவளி பண்டிகை வருகின்ற சனிக்கிழமை கொண்டாடப்படுகிறது. இதனையடுத்து, கோவை நகரில் காந்திபுரம், டவுன்ஹால், ஒப்பணக்கார வீதி உள்ளிட்ட கடை வீதிகளில் துணிகள் மற்றும் பொருட்கள் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

இதனிடையே, திருட்டைத் தடுக்க கோவை மாநகர போலீசாரும், கொரானா விதி முறைகள் பின்பற்றப்படுகிறதா? என மாநகராட்சி அதிகாரிகளும் முக்கியமான இடங்களில் கண்காணித்து வருகின்றனர்.

இந்த நிலையில், கோவை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் தென் மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இவர்கள் தீபாவளி பண்டிகையை தங்கள் சொந்த ஊரில் கொண்டாட புறப்பட துவங்கிவிட்டனர்.

இதன் காரணமாக கோவை காந்திபுரம், சிங்காநல்லூர் பேருந்து நிலையங்கள் மற்றும் ரயில் நிலையத்தில் பொதுமக்களின் கூட்டம் அதிகளவில் உள்ளது. ரயில்களில் வெடிக்கக்கூடிய பட்டாசுகளை எடுத்துச் செல்ல தடை உள்ளது.

எனவே, இதனை கண்காணிக்க ரயில்வே பாதுகாப்பு படை(ஆர்.பி.எப்) வீரர்கள் மற்றும் ரயில்வே போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ரயில்வே டிஎஸ்பி குணசேகரன் உத்தரவின் பேரில், காவல் ஆய்வாளர் கிருஷ்ணலீலா தலைமையிலான போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து ரயில்வே போலீசார் கூறுகையில் ''ரயில்களில் எளிதில் தீப்பற்றும் பொருட்கள் மற்றும் வெடிப்பொருட்களை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே, ரயில் நிலையத்துக்கு வருவோரின் உடமைகள் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் தீவிர சோதனைக்கு பின்னரே பயணிகள் உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.

பட்டாசுகளை யாராவது ரயில்களில் கொண்டு சென்றால் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். கோவை ரயில் நிலையத்தில் பிளாட்பாரம், தங்கும் இடங்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் 30க்கும் மேற்பட்ட போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பயணிகள் ரயில் நிலையம் வரும்போது கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும், கிருமிநாசினி மூலம் கைகளை சுத்தப்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. ரெயில் நிலையம் முழுவதும் மோப்ப நாய் உதவியுடன் சோதனை நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...