கோவை: கோவையில் நடப்பு 2020-21-ம் நிதியாண்டில் மொத்தம் ரூ.187 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, சொத்துவரி வசூலை தீவிரப்படுத்த மாநகராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

கோவை மாநகராட்சியில் கிழக்கு, மேற்கு, மத்தியம், வடக்கு, தெற்கு என 5 மண்டலங்கள் உள்ளன. அந்த 5 மண்டல எல்லைக்குள் சொத்து வரி செலுத்துபவர்கள் 4 லட்சத்து 75 ஆயிரம் பேர் உள்ளனர்.
கடந்த 2019-20ம் நிதியாண்டில் மாநகராட்சி சார்பில் ரூ.300 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதில் முதல் அரையாண்டு முடிவில் ரூ.59 கோடி வசூலிக்கப்பட்டது. அதேபோல் நடப்பு 2020-21-ம் நிதியாண்டில் மொத்தம் ரூ.187 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, சொத்துவரி வசூலை தீவிரப்படுத்த மாநகராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘‘நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டு முடிவின் படி ரூ.74 கோடி சொத்துவரி வசூலிக்கப்பட்டு உள்ளது. நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அடைய வசூல் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. சொத்து வரி தொகை செலுத்தாதவர்களுக்கு நோட்டீஸ் வழங்கி வசூல் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
அதேபோல, நீண்ட நாட்களாக சொத்துவரியை நிலுவை வைத்துள்ளவர்களின் ஏற்கனவே பட்டியல் வெளியிடப்பட்டு அவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எனவே, மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய அனைத்து வரியினங்களையும் உடனடியாக செலுத்தி குடிநீர் இணைப்பு துண்டிப்பு மற்றும் சட்ட ரீதியான நடவடிக்கைகளை தவிர்த்து, மாநகராட்சியின் வளர்ச்சி பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்,’’ என்று தெரிவித்தார்.