கோவையில் கொரோனாவால் தொழிலில் நஷ்டமடைந்து தற்கொலைக்கு முயன்ற தொழிலதிபரை காப்பாற்றிய போலீசார்..! குவியும் பாராட்டுகள்!

கோவை: கோவையில் கொரோனாவால் தொழிலில் நஷ்டம் அடைந்து தற்கொலைக்கு முயன்ற தொழிலதிபரை காப்பாற்றிய போலீசாருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.


கோவை: கோவையில் கொரோனாவால் தொழிலில் நஷ்டம் அடைந்து தற்கொலைக்கு முயன்ற தொழிலதிபரை காப்பாற்றிய போலீசாருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

கோவை ஒண்டிப்புதூரை சேர்ந்த குமார் (50). பில்டிங் காண்ட்ராக்டராக உள்ளார். இவருக்கு மனைவி மற்றும் ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர். கொரோனாவால் தொழிலில் நஷ்டம் அடைந்தார். இதனால் கடந்த சில நாட்களாகவே விரக்தியில் இருந்த இருந்தார்.

இந்நிலையில், நேற்று காலை குமார் திடீரென மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் சிங்காநல்லூர் போலீசில் புகார் செய்தனர்.

இதையடுத்து, போலீசார் மாயமான குமாரை தேடி வந்தன. இந்த நிலையில் குமார் தனது மகளின் செல்போனுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பினார். அதில் நான் உங்களை நல்லபடியாக வாழ வைக்க முடியாது, எனது முடிவை நான் தேடிக் கொள்கிறேன் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த மகள் இதுகுறித்து சிங்காநல்லூர் போலீசாருக்கு தெரியப்படுத்தினார். பின்னர் சிறிது நேரத்தில் குமார் தனது மகள் செல்போனுக்கு தொடர்பு கொண்டார்.

அப்போது, நான் மேட்டுப்பாளையத்தில் உள்ள ஒரு பாலத்தின் மேல் நிற்கிறேன். பவானி ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொள்ளப் போகிறேன் என்று கூறி இணைப்பைத் துண்டித்தார். இதனையடுத்து, அதிர்ச்சி அடைந்த மகள் இதுகுறித்து சிங்காநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உஷாரான போலீசார் இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

பின்னர், மேட்டுப்பாளையம் போலீசார் பவானி ஆற்றங்கரையோரம் இருந்த பரிசல் காரரிடம் இது குறித்து விவரம் தெரிவித்து நாங்கள் அங்கு வரும் வரை கண்காணிக்கும் படி எச்சரித்தனர்.

அதன்படி, மேட்டுப்பாளையம் போலீசார், பரிசல்காரர்களும் மேட்டுப்பாளையம் பவானி ஆற்றங்கரையோரம் தேடியபோது குமார் ஆற்றில் குதிக்க முயன்றார். மின்னல் வேகத்தில் சென்ற போலீசார் குமாரை பிடித்து காப்பாற்றினர். பின்னர் குமாரை சிங்காநல்லூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து, சிங்காநல்லூர் போலீசார் குமாருக்கு உரிய அறிவுரை வழங்கினர். சினிமா காட்சிகளை விட கொஞ்சமும் பரபரப்பு குறையாத இந்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனிடையே, சிங்காநல்லூர் மட்டும் மேட்டுப்பாளையம் போலீசாரை பொதுமக்கள் மற்றும் உயர் அதிகாரிகள் தொடர்ந்து பாராட்டி வருகின்றனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...