வால்பாறை அதிமுக கிளை செயலாளர்களுக்கு தீபாவளி பரிசு..! கஸ்தூரி வாசு எம்எல்ஏ வழங்கினார்!

கோவை: வால்பாறை அதிமுக கிளை செயலாளர்களுக்கு தீபாவளி பரிசுகளை எம்எல்ஏ கஸ்தூரி வாசு வழங்கினார்.


கோவை: வால்பாறை அதிமுக கிளை செயலாளர்களுக்கு தீபாவளி பரிசுகளை எம்எல்ஏ கஸ்தூரி வாசு வழங்கினார்.

கோவை மாவட்டம் வால்பாறையில் வரும் சட்டமன்ற தேர்தலைக் கருத்தில் கொண்டு அதிமுக தீவிரமாக கட்சி பணியாற்றி வருகிறது கட்சியின் இளைஞர், இளம்பெண்கள் பாசறையில் அதிகப்படியான உறுப்பினர்களை சேர்க்கும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் பூத் கமிட்டிகள் அமைக்கும் பணிகளும் விரைவாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், அதிமுக தொண்டர்களை ஊக்கப்படுத்தும் விதமாக தமிழக அரசு சிறப்பு செயலாக்கத் திட்டம் மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி அவர்களின் சார்பாக வால்பாறை பகுதியிலுள்ள கிளை கமிட்டிகள் வார்டு கமிட்டிகள் நிர்வாகிகளுக்கு இன்று நடைபெற்ற கூட்டத்தில் வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசுவால் தீபாவளி பரிசு வழங்கப்பட்டது.



அதன்படி, வார்டு செயலாளருக்கு ரூபாய் 15,000ம், கிளை செயலாளருக்கு ரூ 7,000ம், துணை செயலாளருக்கு 5000ம் ரொக்கமும், தலா ஒரு வேஷ்டி சட்டை துணி, ஒரு சேலை தீபாவளி அன்பளிப்பாக வழங்கப்பட்டது

இக்கூட்டத்தில் வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு, நகர செயலாளர் மயில் கணேசன், அம்மா பேரவை மாவட்ட செயலாளர் விஜயகுமார், எம்ஜிஆர் மன்ற செயலாளர் தோப்பு அசோகன், கூட்டுறவு வங்கி தலைவர் வால்பாறை வி அமீது வாசு, பொன் கணேஷ், சலாவுதீன், எஸ்.கே.எஸ் பாலு லோகேஷ், எம்.ஆர்.எஸ் மோகன் வழக்கறிஞர் ஆர்.ஆர்.பெருமாள் உட்பட 150க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...