திருப்பூரில் பனியன் நிறுவன உரிமையாளர் வீட்டில் 80 பவுன் நகை மற்றும் ரூ.12 லட்சம் கொள்ளை - வக்கீல் உள்பட 3 பேர் கைது!

திருப்பூர்: திருப்பூரில் பனியன் நிறுவன உரிமையாளர் வீட்டில் 80 பவுன் நகை மற்றும் ரூ.12 லட்சம் கொள்ளையடித்த வழக்கில் வக்கீல் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.


திருப்பூர்: திருப்பூரில் பனியன் நிறுவன உரிமையாளர் வீட்டில் 80 பவுன் நகை மற்றும் ரூ.12 லட்சம் கொள்ளையடித்த வழக்கில் வக்கீல் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருப்பூர் எம்.எஸ் நகரைச் சேர்ந்த சீனிவாசன் பனியன் நிறுவன உரிமையாளராக உள்ளார். இந்நிலையில் சென்னையில் உள்ள மகனைப் பார்க்க சீனிவாசனின் மனைவி மற்றும் மகள் இருவரும் சென்னைக்கு சென்றுள்ளனர்.

இதனிடையே, கடந்த 1ம் தேதி காலை சீனிவாசன் நடைபயிற்சிக்காக வெளியே சென்றுள்ளார். இதன் பின்னர் வீட்டிற்கு வந்த அவர், வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். வீட்டு பீரோ உடைக்கப்பட்டு உள்ளே இருந்த 80 பவுன் நகை மற்றும் ரூ.12 லட்சத்து 25 ஆயிரம் கொள்ளை போயிருந்தது.

பின்னர், இது குறித்து திருப்பூர் வடக்கு போலீசில் புகார் கொடுத்தார்.



இது தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் அங்கு பதிவாகியிருந்த சிசிடிவி காட்சியில் பதிவாகியிருந்த காரை வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், சீனிவாசனின் வீட்டில் வசிக்கும் வேன் டிரைவரான அண்ணாமலை, சீனிவாசனிடம் பணம் அதிகமாக இருப்பதால், இதனை கொள்ளையடிக்க அவரது நண்பரான திருச்சி பெட்டவாய்தலை பகுதியை சேர்ந்த ஆம்புலன்சு டிரைவரான மணிகண்டன், நாகராஜன் மற்றும் ஸ்டீபன் ஆகியோரிடம் தெரிவித்துள்ளார். இதற்கு வக்கீல் மனோஜ்குமார் என்பவர் திட்டம் தீட்டி கொடுத்ததும் தெரியவந்தது.

இதனைத்தொடர்ந்து, கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய வக்கீலான மனோஜ்குமார் மற்றும் மணிகண்டன், அண்ணாமலை ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும், வக்கீலிடமிருந்து 53 பவுன் நகைகள் மற்றும் ரூ.3 லட்சத்து 3 ஆயிரத்தை போலீசார் மீட்டனர்.

மேலும், கொள்ளை வழக்கில் தொடர்புடைய காரும் பறிமுதல் செய்யப்பட்டது. இதனிடையே, இந்த சம்பவத்தில் தொடர்புடைய தலைமறைவாக உள்ள நாகராஜ் மற்றும் ஸ்டீபன் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...