கோவையில் மருத்துவமனைகள், கோயில்கள் அருகில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும் - மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்!

கோவை: கோவை மாவட்டத்தில் மருத்துவமனைகள், வழிபாட்டுத்தலங்கள் உள்ளிட்ட இடங்களில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி அறிவுறுத்தியுள்ளார்.

கோவை: கோவை மாவட்டத்தில் மருத்துவமனைகள், வழிபாட்டுத்தலங்கள் உள்ளிட்ட இடங்களில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி அறிவுறுத்தியுள்ளார். 

இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது-

 

உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தமிழக அரசு தீபாவளியன்று பட்டாசு வெடிப்பதற்கு காலை 6 முதல் 7 மணி வரை, இரவில் 7 முதல் 8 மணி வரையும் அனுமதி வழங்கியுள்ளது. 

தமிழகத்தின் அனைத்து மாநகராட்சிகளிலும் தீபாவளிக்கு முன்பு 7 நாட்களும் தீபாவளிக்கு பின்பு 7 நாட்கள் மொத்தம் 14 நாட்கள் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் காற்றின் தரத்தை அளவீடு செய்யும். மாசில்லா சுற்றுச்சூழலை பேணிக்காப்போம். நம் ஒவ்வொருவரின் கடமையும் பொறுப்புமாகும். 

இதனை கருத்தில் கொண்டு பாதுகாப்பான தீபாவளி கொண்டாடுவதற்கு பொதுமக்கள் குறைந்த ஒலியுடன் குறைந்த அளவில் மாசுபடுத்தும் தன்மையும் கொண்ட பட்டாசுகளை வெடிக்க வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளின் முன் அனுமதியுடன் பொதுமக்கள் திறந்த வெளியில் சமூக இடைவெளியுடன் நின்று கூட்டாக பட்டாசு வெடிப்பதற்கு அந்த பகுதியில் உள்ள நலச் சங்கங்கள் மூலம் முயற்சிக்கலாம். 

மேலும், அதிக ஒலி எழுப்பும் தொடர்ச்சியாக வெடிக்கக்கூடிய பட்டாசுகளை தவிர்க்கலாம். மருத்துவமனை, வழிபாட்டுத் தலங்கள் மற்றும் அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசுகள் வெடிப்பதை தவிர்க்க வேண்டும். குடிசைப் பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும். மக்கள் அனைவரும் விபத்தில்லா மற்றும் மாசு இல்லாத தீபாவளியை சிறப்பாக கொண்டாடுவோம் இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...