சென்னை: துப்பாக்கி குண்டுகளுடன் விமானத்தில் பயணம் செய்ய முயன்ற காங்கிரஸ் கட்சி பிரமுகர் மயூரா ஜெயக்குமாரிடம் விமான நிலைய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை: துப்பாக்கி குண்டுகளுடன் விமானத்தில் பயணம் செய்ய முயன்ற காங்கிரஸ் கட்சி பிரமுகர் மயூரா ஜெயக்குமாரிடம் விமான நிலைய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவராகவும், காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவராகவும் உள்ளவர் மயூரா ஜெயக்குமார்.
இந்நிலையில், அவர் இன்று காலை சென்னையில் இருந்து கோவை வருவதற்காக சென்னை விமான நிலையம் வந்தார். அவர் இன்டிகோ விமானத்தில் பதிவு செய்திருந்தார். அந்த விமானம் 5.30க்கு புறப்படுவதாக இருந்தது.
அப்போது, மயூரா ஜெயக்குமார் கொண்டுவந்த சூட்கேசை விமான நிலைய அதிகாரிகள் சோதனையிட்டனர். அதில் 15 தோட்டாக்கள் இருந்தன. உடனடியாக அதனை கைப்பற்றி நீங்கள் இந்த விமானத்தில் பயணம் செய்ய முடியாது. உங்களிடம் விசாரணை செய்ய வேண்டும் என அதிகாரிகள் அழைத்துச் சென்றனர்.
அதனை தொடர்ந்து, துப்பாக்கிக்கான அரசு அனுமதி என்னிடம் உள்ளது என்று அவர் கூறியுள்ளார். அவைகள் அனைத்தும் சரியாக உள்ளதா? எதற்காக 15 தோட்டாக்கள் கொண்டு வந்தீர்கள் என்பது குறித்து தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர். இதனால் சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.