கோவை: கல்வி உதவித்தொகை கிடைக்காததால் உயிரிழந்த மாணவிக்கு நீதி கேட்டு கோவையில் இந்திய மாணவர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோவை: கல்வி உதவித்தொகை கிடைக்காததால் உயிரிழந்த மாணவிக்கு நீதி கேட்டு கோவையில் இந்திய மாணவர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆந்திர மாநிலத்தில் எல்.எஸ்.ஆர் கல்லூரியில் பயின்று வரும் ஐஸ்வர்யா என்ற மாணவி கல்வி உதவித் தொகை கிடைக்காத காரணத்தினால் தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், அந்த மாணவிக்கு உடனடியாக நீதி கிடைக்க வேண்டும் எனவும் உயிரிழந்த மாணவியின் குடும்பத்துக்கு உடனடியாக நிவாரணத் தொகையை வழங்க வேண்டும் என்றும் கல்வியால் மாணவர்களின் தற்கொலைகளை நிறுத்த வலியுறுத்தியும் இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள பெரியார் சிலை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் உயிரிழந்த மாணவி ஐஸ்வர்யாவிற்கு நீதி வேண்டும் என்றும் உயிரிழந்த மாணவியின் குடும்பத்திற்கு உடனடியாக நிவாரணம் வழங்கிட வேண்டும் என்றும் மாணவர்களின் கல்வி படிப்பில் அரசு வஞ்சிக்கக் கூடாது என்றும் முழக்கங்களை எழுப்பினர்.
மேலும், மாணவர்களுக்கு வழங்க வேண்டிய கல்வி உதவி தொகையில் உள்ள நிலுவைத் தொகைகளை உடனடியாக வழங்கிட வலியுறுத்தியும் முழக்கங்களை எழுப்பினர்.