கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத்தில்‌ தனிமைப்படுத்தபட்ட பகுதிகளில்‌ மாநகராட்சி ஆணையர் நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு!

கோவை: கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத்தில்‌ தனிமைப்படுத்தபட்ட பகுதிகளில்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ பெ.குமாரவேல்‌ பாண்டியன்‌ இ.ஆ.ப., அவர்கள்‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கோவை: கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத்தில்‌ தனிமைப்படுத்தபட்ட பகுதிகளில்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ பெ.குமாரவேல்‌ பாண்டியன்‌ இ.ஆ.ப., அவர்கள்‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



கோவை மாநகராட்சி கொரோனா வைரஸ்‌ தொற்று பரவுதலை தடுப்பதற்காக பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மிகச்சிறப்பாக மேற்கொண்டு வருகிறது. 

இந்நிலையில், அதன்‌ தொடர்ச்சியாக மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ அவர்கள்‌ இன்று கிழக்கு மண்டலம்‌ வார்டு எண்‌.57க்குட்பட்ட பாரதிநகர்‌ பின்புறம்‌ உள்ள காமராஜா சாலையில்‌ தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். 



பின்னர், தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில்‌ தொடர்ந்து கிருமி நாசினி தெளிக்கப்பட வேண்டும்‌ எனவும்‌, தனிமைப்படுத்தப்பட்டவர்கள்‌ தனிமைப்படுத்தப்பட்ட காலம்‌ முடியும்‌ வரை வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம்‌ எனவும்‌, அனைவரும்‌ கட்டாயம்‌ முகக்கவசங்கள்‌ அணியவும்‌, சமூக இடைவெளியை பின்பற்றிடவும்‌, தங்களது வீடுகளை காலை மற்றும்‌ மாலை வேளைகளில்‌ கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்திட வேண்டும்‌ எனவும்‌, தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் இருப்பவர்களுக்கு தேவையான காய்கனி, பால்‌ மற்றும்‌ மளிகை பொருட்கள்‌ கிடைப்பதற்கு தேவையான வசதிகளை செய்திட வேண்டுமென தொடர்புடைய அலுவலர்களிடம்‌ தெரிவித்த ஆணையாளர்‌ அவர்கள்‌ அப்பகுதியில்‌ உள்ள பொதுமக்களிடம்‌ காய்ச்சல்‌, சளி, இருமல்‌ பரிசோதனை செய்ய வீடு வீடாக சுகாதாரப்‌ பணியாளர்கள்‌ வருகின்றனரா என கேட்டறிந்தார். 

இதையடுத்து, அனைவரும்‌ இப்பகுதியில்‌ நடைபெறும்‌ சிறப்பு மருத்துவ முகாமில்‌ பரிசோதனை செய்து கொள்ளுமாறும்‌ தெரிவித்த பின்னர்‌ அங்குள்ள பொதுமக்களிடம்‌ மற்றும்‌ சாலையோர ஹோட்டல்‌ உரிமையாளர்களிடமும்‌ குப்பைகளை சாலை ஓரங்களில்‌ கொட்டாமல்‌ குப்பைத்தொட்டிகளில்‌ மட்டுமே கொட்டி மாநகராட்சியை தூய்மையாக வைத்திருக்க வேண்டுமென தெரிவித்தார். 



மேலும், அப்பகுதியில்‌ கழிவு செல்லும்‌ சாக்கடை கால்வாய்களை பார்வையிட்டு கொசுக்கள்‌ உற்பத்தியாகாமல்‌ இருக்க சாக்கடை கால்வாய்களில்‌ கொசு மருந்துகள்‌ தெளிக்கப்பட்டு வருவதை பார்வையிட்ட பின்னர்‌, கழிவு செல்லும்‌ கால்வாய்களில்‌ குப்பைகள்‌ இருந்தால்‌ உடனடியாக அகற்றி நீர் தேங்காமல்‌ இருக்க சுகாதார அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

அதனைத்‌ தொடர்ந்து, கொடீசியா வளாகத்தில்‌ தீபாவளிப்‌ பண்டிகைக்காக சேலம்‌ மற்றும்‌ திருச்சி மார்க்கமாக பேருந்துகள்‌ செல்ல மூன்று நாட்களுக்கு தற்காலிகமாக செயல்படவுள்ள பேருந்து நிலையத்தில்‌ பயணிகளுக்காக அமைக்கப்பட்டுள்ள கழிப்பிட வசதிகள்‌ மற்றும்‌ குடிநீர் வசதிகளைக்‌ குறித்து மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ திரு.பெ.குமாரவேல்‌ பாண்டியன்‌ இ.ஆ.ப., அவர்கள்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின் போது கிழக்கு மண்டல உதவி ஆணையர்‌ எம்‌.முருகன்‌, உதவி செயற்பொறியாளர்‌ பிரபாகரன்‌, மண்டல சுகாதார அலுவலர்‌ சந்திரன்‌, சுகாதார ஆய்வாளர்‌ ராஜேந்திரன்‌ மற்றும்‌ பணி மேற்பார்வையாளர்‌, மாநகராட்சி அலுவலர்கள்‌ உடனிருந்தனர்‌.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...