தேசிய பசுமை தீர்ப்பாயத்தில்‌ “ஈஷா மஹாசிவராத்திரி விழாவை தடை செய்ய வேண்டும்‌” என்ற கோரிக்கை நிராகரிப்பு!

கோவை: தேசிய பசுமை தீர்ப்பாயத்தில்‌ “ஈஷா மஹாசிவராத்திரி விழாவை தடை செய்ய வேண்டும்‌” என்ற கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.


கோவை: தேசிய பசுமை தீர்ப்பாயத்தில்‌ “ஈஷா மஹாசிவராத்திரி விழாவை தடை செய்ய வேண்டும்‌” என்ற கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.

பாரத கலாச்சாரத்தின்‌ மிக முக்கிய திருவிழாவாகவும்‌ ஆன்மீக முக்கியத்துவம்‌ வாய்ந்த நாளாகவும்‌ விளங்கும்‌ மஹா சிவராத்திரி தினத்தை ஈஷா கடந்த 25 ஆண்டுகளாக வெகு இறப்பாக கொண்டாடி வருகிறது.

ஒவ்வொரு ஆண்டும்‌ அரசின்‌ சட்டதிட்ட விதிகளை பின்பற்றி, எவ்வித அசம்பாவிதமும்‌ இன்றி இவ்விழாவை தொடர்ந்து நடத்தி வருகிறது. இவ்விழாவில்‌ ஜாதி, மத, இன வேறுபாடுகளை கடந்து ஆயிரக்கணக்கானவர்கள் பங்கேற்று வருகின்றனர்‌.

இந்நிலையில்‌, “ஈஷா மஹாசிவராத்திரி விழாவை எப்படியாவது நிறுத்து விட வேண்டும்‌” என்ற ஒற்றை நோக்கத்துடன்‌ அடிப்படை ஆதாரமற்ற

குற்றச்சாட்டுக்களை முன்‌ வைத்து தேசிய பசுமை தீர்ப்பாயத்தில்‌ ஒரு வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கில்‌ பசுமை தீர்ப்பாயம்‌ நேற்று (நவம்பர்‌ 9) தீர்ப்பளித்துள்ளது.

அதில்‌ விழாவுக்கு நிரந்தரமாக தடை விதிக்க வேண்டும்‌ என்ற மனுதாரரின்‌ கோரிக்கையை நிராகரித்த பசுமை தீர்ப்பாயம்‌, “வழக்கம்போல்‌ சம்பந்தப்பட்ட துறைகளில்‌ உரிய அனுமதிகள்‌ பெற்று கொண்டு மஹாசிவராத்திரி விழாவை தொடர்ந்து நடத்தலாம்‌” என உத்தரவிட்டுள்ளது. இந்த தீர்ப்பை ஈஷா வரவேற்றது.

தமிழகத்தின்‌ சுற்றுச்சூழல்‌ மேம்பாட்டிற்காக ஈஷா பல ஆண்டுகளாக களத்தில்‌ செயல்‌ செய்து வருகிறது. பசுமை கரங்கள்‌ திட்டம்‌, நதிகளை மீட்போம் இயக்கம்‌, காவேரி கூக்குரல்‌ இயக்கம்‌ போன்றவை இதில்‌ முக்‌கியமானவை.

அதேபோல, நாட்டின்‌ உயரிய சுற்றுச்சூழல்‌ விருதுகளில்‌ ஒன்றான இந்திரா காந்தி பரியவரன்‌ புரஸ்கார்‌ விருது, இந்தியா டுடே நாளிதழின்‌ 'ஸஷஃபை௫இரி' விருது, தேசிய தண்ணீர்‌ விருது போன்ற விருதுகள்‌ கிடைத்துள்ளன. மேலும்‌ ஐ.நா சுற்றுச்சூழல்‌ அமைப்பின்‌ சர்வதேச அங்கீகாரமும்‌ கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...