கோவை கரும்புக்கடை பகுதியில் அரசு உயர்நிலைப்பள்ளி அமைக்க வேண்டும் - மாவட்ட ஆட்சியருக்கு பொதுமக்கள் கோரிக்கை!

கோவை: கோவை கரும்புக்கடை பகுதியில் பள்ளி மாணவர்களின் நலன் கருதி அரசு உயர்நிலைப்பள்ளி அமைக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


கோவை: கோவை கரும்புக்கடை பகுதியில் பள்ளி மாணவர்களின் நலன் கருதி அரசு உயர்நிலைப்பள்ளி அமைக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை நகரின் மிக முக்கிய பகுதியில் கரும்புக்கடை உள்ளது. கரும்புக்கடையை சுற்றி ஆசாத் நகர், போத்தனூர், உக்கடம் அல்-அமீன் காலனி, ஜி எம் நகர், பொன்விழா நகர் என ஏகப்பட்ட சிறுபான்மை மக்கள் வாழும் பகுதிகள் உள்ளன சுமாராக 50 ஆயிரம் குடும்பங்கள் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் இந்த பகுதியில் வசித்து வருகின்றனர்.

இவ்வளவு மக்கள் நெருக்கமாக வசித்து வரும் இந்த பகுதியில் அரசின் ஒரு உயர்நிலைப் பள்ளி கூடம் இருபாலரும் பன்னிரண்டாம் வகுப்பு வரை படிக்க தேவைப்படுகிறது.

இந்தப் பகுதியில் உள்ள பெண்கள் குறிப்பாக இஸ்லாமியர்கள் மிக நீண்ட நேரம் பயணம் செய்து காத்திருந்து பேருந்துகளில் ஏறி ஒப்பணக்கார வீதி அரசு பள்ளி மற்றும் பிரசன்டேஷன் கான்வென்ட் தலைமை தபால் நிலையம் அருகில் சென்று தான் படிக்க வேண்டியுள்ளது.

இதனிடையே, மேம்பால வேலை நடைபெறுவதால் மிக நீண்ட தூரம் பயணம் செல்ல வேண்டி இருப்பதால் பலர் படிப்பை பாதியிலேயே விட்டு விடுகின்றார்கள். பதின்பருவ வயது பெண்கள் போய் வருவதற்கு பல சிரமங்கள் உள்ளன. பெற்றோர்களுக்கு இது தெரியும்.

கல்வி மிக முக்கியமான ஒரு அடிப்படை தேவை. கரும்புக்கடை பகுதி மக்கள் சுமார் இருபதாண்டு காலமாக ஒரு உயர்நிலைப் பள்ளி கூடம் கேட்டு வருகின்றனர்.

இந்நிலையில், அமைச்சர் எஸ் பி வேலுமணி அவர்களும் மாவட்ட நிர்வாகமும், கல்வித்துறையும் கனிவு கூர்ந்து இந்த வேண்டுகோளை பரிசீலனை செய்ய வேண்டும் என்று கரும்புக்கடை பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நல்ல படித்த வலிமையான ஒரு இளம் சமுதாயம் தோன்றும் அது இந்திய வளர்ச்சிக்கு மிக முக்கிய காரணமாக அமையும்.

பல்வேறு திறமைகளை உள்ளடக்கிய ஒரு மாபெரும் மாணவ சமுதாயம் இந்த பகுதியில் இருக்கிறது. வழிகாட்ட வேண்டிய இடத்தில் நாம் இருக்கின்றோம்.

சமுதாய இயக்கங்கள் அரசியல் அமைப்புகள் இதில் கவனம் செலுத்தி நமது அனைவரின் கோரிக்கையாக பன்னிரண்டாம் வகுப்பு வரை மாணவ மாணவிகள் படிக்கும் ஒரு பள்ளிக்கூடம் இந்த பகுதியில் கட்ட அரசுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

அதுபோலவே இந்த பகுதியில் அரசுடைமையாக்கப்பட்ட வங்கி ஆரம்ப சுகாதார நிலையம், நூலகம் போன்ற அடிப்படை வசதிகளையும் கேட்டுப் பெற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...